பேராசிரியர் சுசீந்திரராசா

சைவ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நீண்ட காலம் அதிபராக இருந்த அறிஞர் சுவாமிநாதனின் புதல்வர் ஆவார். தமிழ் நாட்டிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புகழ் பெற்றது. அதில் தமிழ்த்துறையைத் தொடங்கி முதற் போரசிரியாராக விளங்கியவர் விபுலாநந்த அடிகளாவர். மொழியியல் அறிஞராக விளங்கிய சுசீந்திரராசா அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக விளங்கினார். பின் ஈழத்திலுள்ள கொமும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கற்பித்தார். பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல் துறைப்பேராசிரியராகவும் பல ஆண்டுகள் விளங்கினார்.

ஓராண்டு இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு செய்து உலகளாவிய நிலையில் மொழியியல் அறிஞர்களின் தொடர்பையும் மதிப்பையும் பெற்றார். அமெரிக்காவிலுள்ள மொழியியற் பேராசிரியர் ஜேம்ஸ் கெயர், கொல்கேற் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோன் றொஜ் காட்டர், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியர் ஆர். ஈ. ஆஷா, ரஸ்ய நாட்டு மொழியியல் பேராசிரியர் அந்திரநோவ் முதலியோரின் பெரும்மதிப்பைப் பெற்றார்.
தமிழ் நாட்டுப் பேராசிரியர்களான தெ.பொ மீனாட்சி சுந்தரனார், மு. வரதராசன் ஆகியோரின் பெருமதிப்பையும் பெற்றார். தமிழக மொழியியல் அறிஞர் முத்து சண்முகம், ஈழத்து தமிழ் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் தமிழகத் தமிழரின் தொடர்பை இழந்து தூயதமிழ் மொழியாக நிலை பேறடைந்தது” என்று கூறினார். இக்கட்டுரையில் யாழ்ப்பான தமிழ் ஆய்வுக்கு வேண்டிய துணையைப் பேராசிரியர் சுசீந்திரராசா வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இது சுசீந்திரராசாவின் மொழியியல் ஆய்வின் சிறப்பு சான்றாகும்.
பேராசிரியர் சுசீந்திரராசா பல ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும், தனித்தும் புகழ் வாய்ந்த அறிஞர் சிலருடன் இணைந்தும் ஆக்கியுள்ளார்.
பேராசிரியர் சுசீந்திரராசாவின் பெயர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இதுவரை வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று அகராதிகள் சிலவற்றிலும் இடம் பெற்றுள்ளமை அவரது சர்வதேசப் புகழுக்குச் சான்றாகும்.

“இங்கிலாந்தில் கேம்பிறிஜ்ஜில் உள்ள அகில உலக அறிஞர் வாழ்க்கை வரலாற்று நடுமையம் இந்த ஆண்டு (2000) இறுதியில் வெளியிட உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற 2000 அறிஞர்கள் என்னும் நூலில் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றுள்ள பேராசிரியர் சுவாமிநாதன்  சுசீந்திரராசாவின் பெயரும் இடம்பெறவுள்ளது”

-உதயன் 4.3.2000 ப.9
மொழியியல் துறையில் புகழ்பெற்ற ஆய்வாளராக விழங்கிய சுசீந்திரராசா அவர்கள் சைவ சித்தாந்ததுறையிலும் ஈடுபாடு உடையவராக விளங்குகிறார். பண்டிதமணி கலாநிதி சி.கணபதிப்பிள்ளை சிறந்த சைவ தமிழ்ப் பேரறிஞர் அவருடைய குருநாதர் அளவெட்டி பொ.கைலாசபதி பண்டிதமணி அவரிடம்தாம் சைவ சித்தாந்தத்தைப் பயின்றமை பற்றி விரிவாக எழுதியுள்ளார். எனினும், சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி பற்றி யாரும் ஆராயவோ, எழுதவோ இல்லை. பேராசிரியர் சுசீந்திரராசாவின் தந்தையார் சுவாமிநாதன் திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபராக இருந்த காலத்தில் பொ.கைலாசபதி துணை அதிபராக இருந்தார். பண்டிதமணி பேராசிரியராக பணியாற்றினார் பண்டிதமணி சிந்தனைச் செல்வரிடம் ஒழுங்காகச் சைவசித்தாந்தம் பற்றிப் பயின்றார். பயின்றபோது அவருடைய கருத்துக்களை உடனுக்குடன் எழுதிக் கொன்டார். அவர் எழுதிய குறிப்புக்களை சிலர் பெற்று பிரதி செய்து வைத்திருந்தனர். பண்டிதமணி அமரராகிய பின் இக்குறிப்பேடுகளை வைத்திருந்தவரிடம் பெற்று தொகுத்து வெளியிட்டபெருமை பதிப்பாசிரியர்களான திருவாளர் சுசீந்திரராசா, ஆ.சபாரத்தினம் ஆகியோருக்கு உரித்தாகும். இவர்கள் இருவரும் 1994ல் “பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனைகள்” என்ற நூலாக யாழ்ப்பான பல்கலைக்கழகவெளியீடாக வெளியிட்டார்,2002ம் ஆண்டு சிந்தனைச்செல்வர் பெ.கைலாசபதி நுர்ற்றாண்டு விழா ஆகும். ஆதனை விரிவாகக் கொண்டாடுவதற்கான நூலாக இது அமைந்தது.
அண்மையில யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கௌரவ இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற பண்டிதர்,கலைமாணி மு.கந்தையர் அவர்களின் மூலமாக கொ.கைலாசபதி அவர்களின் சிந்தனை என்ற ஆய்வு நூலை விரிவாக எழுதி “கைலாசபதி ஸ்மிருதி” என்னும் பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்டார். 1999ல் வெளிவந்த இந்நூல் நூற்றாண்டு விழாவுக்கான இன்னொரு உந்து சக்தியாக அமைந்துள்ளது. பேராசிரியர் சு.சுசீந்திரராசா,திரு ஆ.சபாரத்தினம் ஆகிய இவருடைய பெயரும்பணியேசிந்தனைச் செல்வர் பற்றிய ஆய்விற்கு மூலமாக அமைந்துள்ளது. பேராசிரியர் சுசீந்திரராசா இளமை காலம் முதலே கைலாச பதியின் பெருமையை தந்தையார் மூலம் அறிந்துள்ளார் என்பதை,
“சைவ ஆசிரியர் கலாசாலையின் நீண்ட காலம் (1929-1951)அதிபராக இருந்த மயிலிட்டி எஸ்.சுவாமிநாதன் அவர்கள் கைலாசபதி அவர்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் அவரை “நல்ல ஒரு விவேகி” எனக் குறிப்பிடுவதுண்டு. இவ்வாறு கூறுவதை நான் இளமையிலே கேட்டுள்ளேன்”.
பொ.கைலாசபதி அவர்களின் சிந்தனை முன்னுரை என்ற கூற்றின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது அதன் விளைவே அண்மைக் காலத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்கும் பணிகளிற்கும் மூலமாக அமைந்தது.

Sharing is caring!