மகாகவி. து. உருத்திரமூர்த்தி

ஈழத்திலும் தமிழகத்திலும் புகழ் பெற்ற ஒரு கவிஞராகிறார். மறுமலர்ச்சிக் காலத்தில் எழுத்துலகில் புகுந்த மகாகவி. து. உருத்திரமூர்த்தி, 1971 வரை கவிதை, காவியம், கவிதைநாடம் முதலிய பல்வேறு துறைகளிலும். கவிதை வடிவிலேயே தமது படைப்புகளை யாத்துள்ளார். ஆய்வாளரும் விமர்சகருமாகிய சண்முகம் சிவலிங்கம் மகாகவி உருத்திர மூர்த்தியின் பெருமையை வரையறை செய்யும் வகையில் பின்வருமாறு கூறியுள்ளார். “மகாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஒரு காலகட்டத்தவராகிறார். நாம் இன்னும் பாரதி யுகத்திலிருக்கிறோம் என்று சொல்லுவது தவறு. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனால், அந்த யுகசந்தி பிரிந்துவிட்டது. அதன் ஒரு கிளை பிச்சமூர்த்தி என்றால் மறுகிளை மகாகவியே, பாரதி வளர்த்த சில கவிதைப்பண்புகள்.

பண்புகளின் தோல்வியே பிச்சமூர்த்தியென்றால் இத்தோல்வி நிகழாமல் அதனை இன்னொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மகாகவி எனலாம்” இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தின் தலைசிறந்த பெருங்கவியே என்பதை இக் கருத்து உறுதி செய்கிறது. மகாகவியின் கவிதைகள் பெருமளவில் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளிவந்துள்ளன வள்ளி (1955) குறும்மா (1966)கண்மணியாள் காதை (1968) ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971) கோடை  (1970) வீடும் வெளியும் (1973) இரண்டு காவியங்கள் (1974) மகாகவி கவிதைகள் (1984) புதியதொரு வீடு (199..) மகாகவியின் ஆறு காவியங்கள் (2000) ஆகிய பத்து நூல்கள் மகாகவி வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்னரும் வெளியாகியுள்ளன. இந்நூல்களிற் பெரும்பாலனவை வெளியாகக் கல்முனையைச் சார்ந்த கவிஞர் எம் ஏ. நுஃமானே பொறுப்பாக இருந்து வருகின்றார். மேலும் சில பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளார்
இத்துணை அதிகமான நூல்களை வெளியிட்டமையல்ல மகாகவியின் பெருமைக்கு காரணம். “நவீன தமிழுக்குப் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியதே” இவருடைய பெருமைக்குக் காரணமாகும் என்கிறார் அறிஞர் முல்லைமணி மகாகவி எழுதிய கோடை கவிதையில் மட்டுமன்றி நாடகத்திலும் சிறந்து விளங்குகிறது. சமகாலச்சமூக நோக்கிலேயே மகாகவியின் அமைகின்றன. இன்றைய காலத்திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத்திருக்கும் நோக்குகள் இன்றைய காலத்திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத்திக்கட்டுக்கள் என்றிவை காணவோ மேடையில்லை புதிய வெற்றிகள் இவைகளைப் புனையும் நாடகம் வேண்டி நம்மொழி கிடந்தது. கோடையை எழுதும் காலமும் குளிர்ந்தது என்று மகாகவி கூறுகிறார். இது அவரது அனைத்துக் கவிதைகளுக்கும் பொருந்தும். இலஞ்சம் எமது சமூகத்தின் கொடுமைகளில் ஒன்று இலஞ்சம் கொடுக்க முடியாமல் ஏழைகள் வருந்துவது சாதாரண நிகழ்ச்சி. இதனை விளக்கும் வகையில் மகாகவியின் பின்வரும் குறும்பா அமைந்துள்ளது
முத்தெடுக்க மூழ்குகின்றான் சீலன் முன்னாலே வந்துநின்றான் காலன் சத்தமின்றி வந்தவனின் கைத்தலக்கிற் பத்துமுத்தைப் போத்தி வைத்தான் போனன் சூலன். இதன் மூலம் இலஞ்சத்தின் தீமையை மகாகவி விளக்குகிறார். மகாகவியின் சிறந்த கவிதை நூல்களில் ஒன்று குறும்மா இது தமிழகத்திலும் பெரும் புகழ் பெற்றுள்ளது. நாம்பார்த்தசாரதி (தீபம், செப்டெம்பர் 1986.ப.80), தமிழக அறிஞர் சி.கனகசபாபதி எம்.ஏ.(தீபம் ஆகஸ்ட் 1978) ஆகியோர் குறும்பாவைப் பெரிதும் பாராட்டினர்.
“தமிழ்க் கவிதைத்துறையில் மகாகவியின் தனிச்சிறப்புக்கள் இன்னும் சரியான முறையில் பரவலாக இனங்காணப் அனைத்தும் நூலுருப் பெறுவதும் வரலாற்று ரீதியில் புறநிலைப்பட்ட அய்வு முறைக்கு பரவலாக இனங்காணப் படவில்லை. முகாகவியின் படைப்புக்கள் அனைத்தும் நூலுருப் பெறுவதும் வரலாற்று ரீதியில் புறநிலைப்பட்ட ஆய்வு முறைக்கு அவற்றை உட்படுத்துவதும்,மகாகவியை சரியான முறையில் இனங்கான உதவக்கூடும்” என கவிஞர் எம்.ஏ.நு:.மான் குறிப்பிட்டுள்ளார். இன்னும் மகாகவி து.உருத்திமூர்த்தியின் பெருந்தொகையான. எனினும் அவர் ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் என இதுவரை வெளிவந்த நூல்களே சான்று பகர்கின்றன. .ந.காந்தசாமி, அ.செ.முருகானந்தம், மகாகவி து.உருத்திரமூர்த்தி ஆகிய மூவரும் “மகாஜனா தந்த மும்மணிகள்” என்றும் “அளவெட்டி தந்த மூவர்” என்றும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்” என்று போற்றப்படுகின்றனர். இவர்களுள் மகாகவி து.உருத்திர மூர்த்தியின் சிறப்பை முன்னரே பார்த்தோம். அ.ந.கந்நசாமியும் கவிதைத் துறையிற் சிறந்து விளங்கினார்.

Sharing is caring!

2 reviews on “மகாகவி. து. உருத்திரமூர்த்தி”

  1. use for every student. thank you

  2. நிரு. தங்களின் கருத்துக்கு நன்றி

Add your review

12345