மங்கள நாயகம் தம்பையா

எழுத்துலகில் ஆண்களும் பெண்களும் எழுதுகின்ற போதிலும் பெண்கள் ஒரு எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளனர் வலிகாமம் வடக்கிற்கும் பொருந்துவதாகும்.

ஈழத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர் தெல்லிப்பழையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மங்கள நாயகம் தம்பையா அவர்கள் இவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புகழ் பெற்று விளங்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் கருத்து இங்கு நோக்கத்தக்கது

இக் காலகட்டத்திலே இலங்கையில் தமிழ் நாவல் இலக்கியம் நிலைபேறுடைய இலக்கியம் உயரத் தொடங்கும் உண்மையையும் நாம் இங்கு அவதானிக்கவேண்டும் மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம்(1914)  வே.திருஞானசம்பந்தபிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924) கோபால நேசரத்தினம் (1928) முதலியன முக்கியமானவையாகும்.

ஈழத்தில் தமிழ் இலக்கியம் (1978) மங்களநாயகம் தம்பையா நொறுங்குண்ட இதயம் அரியாலர் ஆகிய இரு நாவல்களையும் அநுபவக் களஞ்சியம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் இவரது கணவர் அப்புக்காத்து பெரிய படிப்பாளி ஐநாத் தம்பையா இக் கட்டுரை நூலை ரேஸ்ட் அன் சீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார் (1922) மங்களநாயகம் தம்பையா தெல்லிப்பளை ரீ டபிள்யு பீ குமாரகுலசிங்க முதலியாரின் (1826-1883) கனிஸ்ட முதலியார்  பதிவிரதை விலாசம் எனும் நாடக நூலாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது(1909)

ஈழத்தமிழ் மக்களது சமுதாயப் பிரச்சனைகளை பொருளாகக் கொண்டு எழுதப்பட்டது.
முதல் நாவல் என்ற சிறப்பு திருமதி மங்கள நாயகம் தம்பையாவின் “நொறுங்குண்ட இருதயம்”(1914) நாவலையே சாரும். பேராசிரியர்.நா. சுப்பிரமணியம் (ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978)
“சமுதாய சீர்திருத்தக் காலம் என்ற காலகட்டத்தின் முதல்வராக அமைவது இவரின் நாவல்களின் பெருமையாகும்.

Sharing is caring!

Add your review

12345