மந்திரிமனை

மந்திரி மனையின் மத்திய பகுதி 15 ஆம் நூற்றாண்டளவில் “பரனிருபசிங்கன்” என்பவரால் கட்டப்பட்டது. இதனை மக்கள், இதனுடைய கட்டமைப்பை மிகவும் நுட்பமாக பல்வேறு கலை அம்சங்களுடன் பாதுகாப்பைக் கருதிக் கட்டப்பட்டதாக நம்புகிறார்கள். பாதுகாப்பிற்காகவும், அவர்களுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காகவும் அமைக்கப்பட்ட நிலவறைச் சுரங்கத்தின் நுழைவாயிலாகவும் காணப்படுகின்றது. இங்கு நிலவரைச் சுரங்கங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படு;த்துவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் முன்பகுதி டச்சுக்காலப் பகுதியில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

Sharing is caring!

2 reviews on “மந்திரிமனை”

  1. இந்தக் கட்டிடமானது கல், செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து என்பவை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் மரவேலைகள், ஓடு என்பவைகளும் பெரும்பாலும் பிரித்தானிய காலத்தனவாகவே காணப்படுகிறது. சுண்ணாம்புச் சாந்தானது டச்சுக் காலப் பிற்பகுதியில்தான் யாழ்ப்பாணத்தில் புகுத்தப்பட்டது. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலும், முதலில் சேர்ச்சுகள், பள்ளிகள், அரச கட்டிடங்கள் கட்டத்தான் பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண அரசனின் மாளிகை பற்றிப் போர்த்துக்கேயப் பாதிரியார் குவெறோஸ் (1650) தனது நூலில் எழுதுகையில், அது கல், களிமண்ணினால் கட்டப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவனது மந்திரியின் மனை நீங்கள் கூறுவதுபோல் கட்டப்பட்டிருக்க முடியுமா? இந்தக் கட்டிடத்தினை ஒரு மருத்துவர்தான் கட்டியிருந்தார். ஐரோப்பிய நாடுகளில் வீட்டின்கீழே சேமிப்பு அறை இருப்பதுபோல் ஒரு அறையும் கட்டப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியின் மேற்புறத்தில் இது கட்டப்பட்ட ஆண்டு எழுதப்பட்டுள்ளது.

  2. அ.சி.உ.குமார்

    தங்களின் தகவலுக்கு நன்றி. பாரம்பரியமான இந்த கட்டடத்தின் அமைப்பு தாங்கள் கூறியவாறுதான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள் இதை தெளிவுபடுத்தினால் மேலும் பயனுடையதாக இருக்கும்.

Add your review

12345