மயிலங்கூடனூர் பண்டிதர் சி. அப்புத்துரை

மயிலங்கூடனூர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் மல்லாகம் பண்டிதர் பட்டம் பெற்றவர். அத்துடன் சென்னைச் சித்தாந்த மகாசமாசத்தின்  “சைவப்புலவர்” பட்டமும் பெற்றவர்.

ஆசிரியராயிருந்து  முதலாந்தர அதிபராகப் பணிபுரிந்து மயிலிட்டி (பேய்க் கோயில்  பள்ளிக்கூடத்தை) அ.மி.பாடசாலையை வளர்த்து மயிலிட்டி வடக்கு கலைமகள் மகாவித்தியாலயமாகப் பாரிய வளர்ச்சி காண வைத்தவர்.

பழந்தமிழ் நூல் பயற்சியுடன், நவீன இலக்கிய கவிதைத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலக்கணசந்திரிகை, வினைப்பகுபத விளக்கம்  முதலான இலக்கண நூல்களையும், பண்டிகைக் கனகராயன் பள்ளு, பாரதி என்ற சஞ்சிகை, மழலைச் செல்வம் (1963) முதலான பல நூல்களையும் பதிப்பாசிரியராகவிருந்து பதிப்பித்துள்ளார்.

வரலாற்று  முக்கியத்துவமுடைய வலி வடக்கின்  ‘காங்கேசன் கல்வி மலரின்’  கௌரவ ஆசிரியர்களில்  முதன்மையானவர் . ‘மாவைக் கவிப்பூங்கொத்து’ எனும், மாவை முருகன் மீது இதுவரை காலமும் எழுந்த இலக்கியங்களை அறிமுகம் செய்யும் வரலாற்று ஆவணமான நூலைத் தன் தாயாரின் நினைவாக  வெளியிட்ட பெருமைக்குரியவர் .

உலகளாவிய பல சஞ்சிகைகளில் சமய, தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை  எழுதிக் கொண்டிருக்கும் இவர் மரபுவழிச் செய்யுள் வகையில் ஒல்லுடை மும்மணிமாலை, கொட்டாஞ்சேனை வரதராசர் இரட்டைமணிமாலை, சதகம் முதலான கவிதை நூல்களையும் “நற்சிந்தனை நாற்பது” எனும் வானொலி உரைநூலையும் ஆக்கியுள்ளார்.

Sharing is caring!

Add your review

12345