மயிலங்கூடலூர் கனகரத்தினம்

இளவாலை வடமேற்கில் உள்ள மயிலங்கூடல் எனும் சிற்றூரில் பண்டிதர் த.கனகரத்தினம், பண்டிதர் சி.அப்புத்துரை, புலவர் ம.பார்வதி நாதசிவம், கூடல் இறை பி.நடராசன் ஆகியோர் குறிப்பிடக் கூடிய அறிஞர்கள். அவர்கள் பன்மொழிப் புலமை மிக்கவர் தமிழ் சிங்களம் சமஸ்கிருதம் ஆங்கிலம் பாளி கிந்தி மலையாளம் ஆகிய மொழிகளிற் பாண்டித்தியம் பெற்றவர்

தற்போது கொழம்புத் தமிழ்ச்சங்கத்தின் “சங்கப்புலவர்” எனும் பெருமைமிகு பதவியில் இருக்கும் இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பண்டிதராகிப் பட்டதாரியாகி ஆசிரியத் தொழில் புரிந்து கல்வி அமைச்சின் பாடநூல் வெளியீட்டுப் பிரிவுப் பணிப்பாளராயிருந்து ஒய்வு பெற்றர்

இவருடைய ஆக்கங்களின் சிறுகதைத் தொகுதி ஒன்று தழிழ் சிங்கள இனஒற்றுமை இணைப்பை நோக்காகக் கொண்டு “சேதுபந்தனம்” எனும் பெயருடன் சிங்களத்திலும் (1979) இவரே எழுதி வெளியிட்டு தழிழ் சிங்கள அறிஞர்களின் பாராட்டைப் பெற்றமை குறிப்பிட்டத்தக்கது

அத்துடன் இலக்கிய உறவு எனும் நூலும் (1996) இவரது ஆக்கங்களின் பல அறிஞர்களாலும் விதந்துரைக்கப்படுகிறது

இளமை முதல் சாரணராகவும் பின் சாரணர் ஆசிரியராகவும் பின் சாரணர் ஆணையாளராகவும் இருந்து ஜனாதிபதி விருது பெற்ற இவர் சாரணன் எனும் சஞ்சிகையின் ஆசியராகவும் பல சாரணீய நூல்களின் ஆசிரியராகவும் பல சாரணீய நூல்களின் ஆசிரியராகவும் விளங்குகிறார்

பழம் பெருந்தமிழ் இலக்கியங்களுடன். நவீன இலக்கியஙகளிலும். உலகளாவிய பன்மொமி இலக்கியங்களிலும் திறமை பெற்றவர் இவர் பல விருதுகளையும், பரிசில்களையும் பெற்றவர் என்பது சொல்லாமலே விளங்கும்.

Sharing is caring!

Add your review

12345