மயிலிட்டி மாதா கோவில்

மயிலிட்டி மாதா கோவில்

அதிகாலை 5.15 மணிக்கு மக்களைப் பக்தியோடு குயிலெழுப்ப வைக்கும் மயிலிட்டி மாதா கோவில் காணிக்கை அன்னையின் மணியோசையின் மகத்துவம் மிகப்பெரியது. கடற்தொழிலுக்கு செல்வோரும் விவசாய வேலைகளுக்குச் செல்வோரும், பிற தொழில் புரிவோரும், தம் பாடங்களைப் படிக்க எழும்பும் மாணவரும் இதனால் பெரும் பயன் பெற்றனர். மொத்தத்தில் மயிலிட்டி மக்களின் ஒரு பொது அலாரமாக மணியோசை விளங்கியது. மாசி மாதம் இரண்டாம் திகதி மயிலிட்டி, பலாலி ஆகிய இரு கிராமங்களையும், திருச்சுரூபம் சுத்தி வரும்போது சாதி, சமய வேறுபாடுகளின்றி அன்னையைத் துதித்தும் தம் வேண்டுதல்களைக் கேட்டும், தாம் பெற்ற நன்மைகளுக்காக நன்றி கூறியும் மக்கள் செல்லும் காட்சி பார்ப்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும், மலர்கள் தூவுவது போல் கச்சான், சோளம்பொரி போன்றவற்றை திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ள கூட்டின் மேல் தூவியும், தங்கச் ச்கிலிகளை அணிவித்தும் தம் நன்றியைத் தெரிவிப்பர்.

திருச்சொரூபம் பற்றிய வரலாறு

பெரிய நாட்டுத் தேவன்துறையின் சங்கரியர்வளவு ஒழுங்கைக்கும் சென்மேரின் ஒழுங்கைக்கும் இடப்பட்ட கடற்கரைப்பகுதில் உள்ள திரு. சந்தியாப்பிள்ளை அவர்களின் வளவினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுரூபமே இதுவாகும் என திரு. சந்தியாப்பிள்ளையின் முன்னோர்கள் அவருக்குக் கூறியுள்ளனர்.

ஒல்லாந்தர் காலத்தில் திரு. சந்தியாப்பிள்ளை அவர்களின் வீட்டிற்கு மேற்குப் பக்கமாகவுள்ள காணியில் இருந்த ஒரு நாற்சதுர வீட்டில் யோசவாஸ் முனிவர் இரகசியமாக வாழ்ந்து திருமறையைப் போதித்து வந்துள்ளார். மீன் விற்பனை செய்யும் பெண்ணைப் போல் வேடம் போட்டு அப்பகுதியில் வழிபாடு நடத்தி வந்துள்ளார். யோசவாஸ் முனிவர் வைத்திருந்த மாதா சரூபமே அவரால் பக்கத்து வளவில் புதைத்து வைக்கப்பட்டிருக்குமென நம்பப்படுகிறது.

இது இந்தியாவில் இருந்து அவரால் கொண்டு வரப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி சுற்றுப்பிரகாரம் நிறைவு பெற்று கோவில் முகப்பில் மாதாவின் கூடுவந்து நின்றது. வழமைபோல கொடிமரம் இறக்கப்பட்டபோது கொடிமரம் இரண்டாக முறிந்து விழுந்துவிட்டது. அங்கு நின்ற பெரியோர்கள் இது ஒரு துர்க்குறி என்றார்கள். இக் கிராமத்திற்கு ஏதோ கெடுதல்  நடக்கப்போகிறது என்று கூறினார்கள். ஆனால் இளைஞர்கள் சிலர் அந்த மரம் ஏறத்தாள 100 வருடங்கள் பழமையான சமண்டலை மரம் அது உள்ளே பழுதாகி முறிந்திருக்குமென அங்குள்ளோரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் எல்லோரும் ஏக்கங்கலந்த முகத்துடன் கோவில் வளவை விட்டு சென்றனர். ஆனால் இவ்வாறான ஒரு அனர்த்தம் நிகழ்ந்தது. இன்றை வரை அங்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்படுமென ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

By -‘[googleplusauthor]’

நன்றி – ஆக்கம் – அருள்மரியதாஸ் பேதுருப்பிள்ளை ( முன்னாள் கடற்தொழில் பரிசோதகர்), அவுஸ்திரேலியா.

Sharing is caring!

Add your review

12345