மயில்வாகனப் புலவர், மாதகல்

1779 – 1816

கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றவர்கள் அனேகர். அவர்களுள்ளே மாதகல் மயில்வாகனப் புலவரும் இருபாலை நெல்லைநாதரும் சிறந்தோர். இம்மயில்வாகனப் புலவருடைய புலமைக்கும் வாக்கு வன்மைக்கும் நிகர் கூறுவதெளிதன்று. அவர் சுன்னாகத்து அந்தணர் திலகரும் கவீந்திரருமாகிய வரதராசபண்டிதர் செய்த சிவராத்திரி புராணத்துக்குச் சொன்ன,

“பரத ராசனுய ரசல ராசனுமை

பங்க நண்புதரு பண்புசேர்

விரத ராசசிவ நிசியி நீள்சரித

மிகவிளங் கிடவி ளம்பினான்

கரத ராச¨னெயு மொழிய ரங்கனருள்

கருணை மாரிநிகர் பரிணிதன்

வரத ராசன்மறை வாண ராசனியல்

மதுர வாசகவி ராசனே.”

என்னும் பாயிரம் அவர் வன்மையை நன்கு விளக்கும்.
அந்தாதி – புலியூர் யமக அந்தாதி
மாலை – யாழ்ப்பாண வைபவ மாலை

நன்றி – http://kanaga_sritharan.tripod.com இணையம்

Sharing is caring!

Add your review

12345