மருதனார் மடம் இறையியற் கல்லூரி

கிறீஸ்தவ இறையியற் கல்லூரி 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டிலே கிறீஸ்தவ சமயமும் யாழ்பாணப் பகுதியில் வாழும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. 1823 இல் அமெரிக்க தூதுப்பணியாளரால் வட்டுக் கோட்டை என்னும் இடத்தில் பற்றிக் கோட்டா செமினறி ஒன்றும் நிறுவப்பட்டது. இக் கல்லூரிக்கு அருகாமையில் கிறீஸ்தவ சேவ ஆச்சிரமமும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றது. இக்கல்லூரி நிறுவப்பட்டதன் நோக்கம் கீழைத்தேய முறைகளிற்கேற்ப  கிறீஸ்தவ சமய உண்மைகளை, வாழும் சூழலுக்கேற்ப மக்கள் எவ்வண்ணமாக இறைவனையும், இறை செயற்பாடுகளையும் புரிந்து கொண்டு அவ்வகைப்பட்ட நிலைமைகளில் மனித குலமேம்பாட்டிற்காக எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற தெளிவை ஏற்படுத்துவதேயாகும்.

இறைவனின் செயற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை பிரதான நோக்காக கருத்திற் கொண்டே திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றன. மனித குலமேம்பாட்டிற்காக செயற்பட வேண்டிய நிலமைகளை பாடங்களாக கற்பித்து வருகின்றனர். இதில் பல இடர்பாடு இருந்தாலும் அதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதனை மாணவர்களிற்கு காண்பிக்கப்படுகின்றது. இக்கல்லூரியில் இருந்து 36 நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டு பணிக்களங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 4-5 வருடங்கள் தங்கியிருந்தே கல்வி பயில வேண்டும். இக்கல்லூரியின் பட்டப்படிப்புச் சான்றிதழை இந்தியாவில் உள்ள செரம்பூர் பல்கலைக்கழகம் வழங்குகின்றது. தற்போது 13 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மாணவர்களிற்குரிய செலவீனங்களை கல்லூரியே பொறுப்பேற்கின்றது. கல்லூரிக்கு பொறுப்பாக பேராயரும் திருச்சபை யாழ்ப்பாண திருமண்டல பரிபாலன குழுவினரும் உள்ளனர். இவர்களின் உத்தரவாதம் மனிதநேயச் செயற்பாடுகளே ஆகும். நாம் இந்த உலகம் சீரான நிலையில் செயற்படுவதற்காக அனுப்பப் பட்டவர்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு வாழப் பழகினால் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சாந்தி, சமாதானத்துடனும் அமைதியாகவும் வாழமுடியும்.

நன்றி : தகவல் – அருள் திரு பென்சமின் ஜெயராசா
விரிவுரையாளர் இறையியற்கல்லூரி
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345