மருது கந்தப்பு வைத்தியர்
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு மு கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வழாவில் பல வைத்திய அறிஞர்களும், ஆய்வாளர்களும் கல்ந்துகொண்டு உரையாற்றினார்கள். பேராசிரியர் மருது கந்தப்பு அவர்கள் தனது புதிய வைத்திய முறையான மூளை நரம்பியல் சிகிச்சையை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி உரையாற்றினார். பிரதம அதிதியாக முன்னாள் சித்தவைத்தியத்துறைத் தலைவர் டாக்டர் சிறிகாந்தா அருணாசலம் அவர்கள் கலந்து கொண்டார்.
மூளையின் பல்வேறு தொடர்பு மையங்களைத் தாமே தூண்டித் தமது நோய்களைத் தாங்களே விஞ்ஞான ரீதியாகக் குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதே நூலாசிரியரின் கருப் பொருளாகும். தனது உடலில் பல வருடங்களாகப் பரீட்சார்த்தமாக ஆராய்ச்சி செய்து இந்த உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
மக்கள் தமது வெளி வேலைகளை எவ்வாறு மனதின் சிந்தனை நுட்பத்தால் தமது மூளையை நெறிப்படுத்தி செப்பமாகச் செய்து முடிக்கிறார்களோ அவ்வாறே உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்களைத் தமது சிந்தனை நுட்பத்தால் மூளையை நரம்புகள் வழியாகத் தூண்டி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவப் பதார்த்தங்களை இரத்த ஓட்டத்தினூடாக நோய்வாய்ப்பட்ட பகுதிக்கு அனுப்பி நோய்களைக் குணப்படுத்தலாம் என்கிறார் பேராசிரியர் மருது கந்தப்பு.
அவர் கண்டறிந்த சிகிச்சை முறைக்கு மூளை நரம்பியல் சிகிச்சை அதாவது CEREBRO NEURAL THERAPY’ (CNT)எனப் பெயரிட்டுள்ளார். மூளை முள்ளந்தண்டினூடாக உடம்பின் சகல பாகங்களையும் நரம்புகளால் தொடர்பு படுத்தியுள்ளதால் நமது சிந்தனையை நரம்புப் பாதையுhடாக ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அனுப்பி நமது தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே நூலாசிரியரின் கண்டுபிடிப்பாகும்.
மூளை நரம்பியல் சிகிச்சை பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்ட நூல்கள் மிக எளிய நடையில் சாதாரண மக்கள் விளங்கிக் கொள்ளகக்கூடியதாக எழுதப்பட்டுள்ளதாக நூலாசிரியர் கூறுகிறார். இந்த நூல்களைப் படிப்பவர்கள் நிட்சயமாகத் தமது நோய்களைத் தாமே குணமாக்கிக் கொள்வதோடு நோய்கள் ஏற்படாமல் தடுத்தும் கொள்ளலாம் என்கிறார். இந்த நூல்கள் ஓவ்வொருவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய மருத்துவ கை ஏடு என்பதை பன்னாட்டு மருத்துவ ஸ்தாபனங்கள் ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்புத்தகத்தை பள்ளிக்கூடப் பாடவிதானங்ளில் சேர்த்துக் கொண்டால் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள, இளைய தலை முறைகளைத் தாக்கிவருகின்ற சலரோகம், அதி இரத்த அழுத்தம், கொழுப்பு உயர்வு, இருதயக் கோளாறுகளிலிருந்து விடுபடலாம் என உலகப் புகழ் பெற்ற வைத்தியர், சேர், பேராசிரியர், அருள்குமரன் சபாரத்தினம் லண்டனில் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரபல காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணரான டாக்டர் கந்தசாமி சந்திரபால் இப்புத்தகத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது இந்நூல் மிகவும் பயன்படக் கூடிய வைத்திய நூல் என்று கூறியுள்ளார்.
By – Shutharsan.S
நன்றி – நெடுந்தீவு இணையம்