மாதகல் புனித அந்தோனியார் ஆலயம்

மாதகல் புனித அந்தோனியார் ஆலயம் பற்றிய வரலாறு. யாழ் மறை மாவட்ட தொன்மை வாய்ந்த கிறிஸ்தவ கிராமங்களில் ஒன்றான மாதகல் சரித்திர பெருமை வாய்ந்த கிராமமாகும். மாதகல் ஒரு வியாபார தலமாகவும், மக்கள் செழிப்பு மிக்க இடமாகவும், தமிழ் அறிஞர்கள், வைத்தியர்கள், கட்டிடக் கலைஞர்கள், விவசாய மேதைகள் இந்தியாவில் இருந்து குடியமர்ந்து காணப்பட்டது. 17, 18ம் நூற்றாண்டில் சத்திய திருச்சபையில் நிலைகொண்ட இவர்கள் தற்போதைய புனித அந்தோனியார் ஆலய வளவினுள் வடகிழக்கு மூலையில் புனித சவேரியார் பெயர் கொண்ட சிறு குடிசைக் கோவிலமைத்து வழிபட்டனர். சில காலத்தின் பின் சிற்றாலயம் புனித சவேரியார் – புனித அந்தோனியார் பெயர் கொண்டு விளங்கியது. இதுவே மாதகல் கிராம மக்களின் முதல் ஆலயமாகும்.

மாதகல் புனித அந்தோனியார் ஆலயம்

கத்தோலிக்க சமயத்தை கழுவிய மக்கள் புனித அந்தோனியாரின் வாழ்க்கையையும் அவரின் அற்புதங்களையும் அறிந்து புனிதரின் மேல் கொண்ட பக்தி தூண்டுதலால் அவரின் பெயர் கொண்ட ஆலயம் அமைக்க ஆவல் கொண்டனர். ஆவலின் பூர்த்தியினால் 1868ம் ஆண்டு வண.சூணவேல் அடிகளாரால் இந்தோனியார் ஆலய அடிக்கல் நாட்டப்பட்டது. அக்காலத்தில் ஆலயம் அமைக்க சந்தியாப்பிள்ளை சந்திரசேகரா என்பவர் நிர்மாண வேலையின் பெரும் பகுதியை தனது சொந்த செலவில் செய்து கொண்டிருந்தபோது 1880ல் இறைவனடி சேர்ந்தார்.

உரோமானிய நாகரீகப்படி அரை வட்டமாக அமைந்திருந்த பலிபீட அமைப்பை வண ஜீடேய் அடிகளார் முற்றாக மாற்றி கொதிக் நாகரீகப்படி கட்டி முடித்தார். தம் சொந்த நாடாகிய பிரான்சிலிருந்து பெருந்தொகைப் பணத்தை நன்கொடையாக பெற்று அபூர்வ வேலைப்பாடுகள் நிறைந்த முகப்பை 1888ல் பூரணப்படுத்தினார். 1900ம் ஆண்டில் சமையல் கூடம் கட்டப்பட்டது. 1917-1918ல் கோவில் தளம் சீமெந்து பூசப்பட்டதுடன் 1925லம் ஆண்டில் கோவிலில் இரு பக்கத்திலும் குருசு வடிவமாக நிர்மாணிக்கப்பட்டது. 1931ல் கல்லறை சுருபம் வைக்கப்பட்டது. 1952- 1954ல் கோவில் முன் மண்டபமும் 1967ல் கல்வாரிக் காட்சியும் நிறுவப்பட்டதுடன் 1981ம் ஆண்டில் புதிய மணியுடன் ஓர் அழகான மணிக் கோபுரமும் கட்டப்பட்டது. 1982ல் மூன்று பெரிய கதவுகள் அகற்றப்பட்டு வேலைப்பாடுகள் நிறைந்த இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டன. 1985ம் ஆண்டு கோவில் மதில்கள் கட்டப்பட்டதுடன் புது முறையிலான நற்கருணைப் பீடம் அமைக்கப்பட்டது.

ஆலயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுவருடம், நத்தார், பரிசுத்தவார வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. 1952-1954ல் பங்குத்தந்தையாகவிருந்த வண. பிதா. கொன்சாலஸ் அடிகளாரால் நவநாட்கள் பொதுவாக்கப்பட்டு ஆனி 4ம் திகதியிலிருந்து நவநாட்கள் ஆரம்பமாகி 13ம் திகதி திருவிழா திருப்பலியும் இடம்பெறுவது அன்றிலிருந்து இன்றுவரை வழக்கமாயிற்று.

By -‘[googleplusauthor]’

நன்றி – மூலம்- www.mathagalmakkal.com இணையம்

தொடர்புடைய தேவாலயங்கள்.

Sharing is caring!

Add your review

12345