மாதகல் புனித செபஸ்தியார் ஆலயம்

மாதகல் புனித செபஸ்தியார் ஆலயம் பற்றிய வரலாறு. மாதகல் கிராமத்தைப் பொறுத்த வரையில் 17ம், 18ம் நூற்றாண்டுகளில் பிரான்சிஸ்கன் துறவற சபையினராலும், புனித யோசவாஸ் அடிகளாரின் நற்செய்திப் போதனையின் பொருட்டும் ஒரு பகுதி குடும்பத்தினர் கிறிஸ்தவ வாழ்வு வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் புனித சவேரியார், புனித அந்தோனியார் டிபயர் கொண்ட சிற்றாலயம் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். காலப்போக்கில் மக்கள் தொகை பெருகவே  புனித செபஸ்தியார் ஆலயம் 1933 ம் ஆண்டு பங்குத் தந்தையாக இருந்த அருள்பணி G.A. குருசாமி அடிகளாரின் ஒத்துழைப்பால் குடிசைக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. பின்பு வணக்கத்திற்குரிய கியோமோர் ஆண்டகையின் அங்கீகாரத்துடன் 1947 ம் ஆண்டு தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்காலப் பகுதியில் பங்குத்தந்தையாக அருள்பணி வேறே அடிகளாரும் அவரையடுத்து பணியாற்றிய அருள்பணி கொன்சால் அடிகளாரின் விடா முயற்சியினாலும் மக்களின் ஒத்துழைப்பினாலும் ஆலயம் வடிவமைக்கப்பட்டது. 1953ம் ஆண்டு ஆலயத்தின் முகப்பு கட்டப்பட்டது. 1950-1953 ம் ஆண்டில் ஆலயமானது குருசு வடிவமாக நிர்மாணிக்கப்பட்டது. காலப் பகுதியில் வளைமாட அமைப்பும் பூர்த்தி செய்யப்பட்டது. 1957ம் ஆண்டு கோவில் தளம் சீமெந்து பூசப்பட்டது. 1967ம் ஆண்டு தவக்காலத்தின் 6ம் வெள்ளியன்று இறை வணக்கத்திற்கு ஏற்றாப் போல் கல்வாரி மலைக் காட்சி அமைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆலய பரிபாலக மனை கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1969 ம் ஆண்டு புனித செபஸ்தியார் ஆலயம் சனசமூக நிலையம் நிரந்தர கட்டடம் ஆக்கப்பட்டது. 1970 – 1974 ம் ஆண்டு காலப் பகுதியில் ஆலயத்தின் இருமருங்கிலும் விறாந்தை கட்டப்பட்டது.

மாதகல் புனித செபஸ்தியார் ஆலயம்

1971- 1973 ம் ஆண்டு காலப் பகுதியில் ஆலய மதில் புனரமைக்கப்பட்டது. 1981ம் ஆண்டு ஆலயத்தின் முகப்பும் முன் மண்டபமும் அமைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் அருள்பணி றெஜி இராஜேஸ்வரன் அடிகளார் இப்பங்கிலே பணியாற்றினார். அவருடைய காலப்பகுதியில் இருபக்கமும் உள்ள விறாந்தைகள் நிலக்காறை வேலைகள் செய்யப்பட்டன. 1992 ம் ஆண்டில் நாட்டின் அசாதாரண நிலை காரணமாக இடப்பெயர்வு ஏற்பட்டது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களை பராமரித்தும் வழிபாடுகளை மேற்கொள்பவராகவும் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியின் உப அதிபர் அருள்பணி விஜேசுதாசன் அடிகளார் காணப்பட்டார். 1997 ம் ஆண்டு மீளக்குடியமர்ந்த வேளையில் மிகவும் சொற்ப அளவிலான மக்களே மீளக்குடியமர்ந்திருந்தனர்.

2003 – 2009 வரை அருள்பணி A.C. கிறிஸ்தோப்பர் பணியாற்றிய காலத்தில் ஆலயத்தின் கதவுகள் மாற்றப்பட்டன. இரு மருங்கிலும் படிகள் அமைக்கப்பட்டு மற்றும் ஆலய பீடமும் நற்கருணைப் பேழையும் புதிதாக அமைக்கப்பட்டது. மேலும் இவ் ஆலயத்தில் இளையோர் ஒன்றியம், தர்ஷனம் என்ற பெயருடன் உருவாக்கப்பட்டு 2009 தொடக்கம் இற்றைவரை இவ் ஆலயத்தின் செயற்பாடுகள் யாவும் துரிதகதியாக்கப்பட்டது. 2009 ம் ஆண்டு ஆலயத்தை பொறுப்பேற்ற அருள்பணி ஆனந்தகுமார் அடிகளார் ஆலயத்தின் பீடம் மற்றும் கிறாதி, புனித செபஸ்தியார் திருச்சுரூபம் போன்றவை சுவிஸ் மக்களின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்டது. புனித செபஸ்தியாரின் பெரிய சுரூபம் ஓர் குடும்பத்தின் உதவியோடு ஆலயத்தின் முன்பகுதியில் புனரமைக்கப்பட்டு மேலும் மணிக்கோபுரம் ஓர் செபஸ்தியார் பக்தனின் உதவியோடு நிர்மாணிக்கப்பட்டது. மேலும் பல செயற்பாடுகள் மக்களின் உதவியோடு பங்குத் தந்தையின் வழிகாட்டலோடும், ஒத்துழைப்போடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்றி – மூலம்- www.mathagalmakkal.com இணையம்

தொடர்புடைய தேவாலயங்கள்.

Sharing is caring!

Add your review

12345