மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த ஆங்கில பாடசாலை

மானிப்பாயில் உள்ள கலாநிதி கிறீன் மெமோறியல் வைத்தியசாலையானது இலங்கையின் முதலாவது வைத்தியக்கல்லூரி ஆகும். இவ்வைத்தியசாலையின் தென்கிழக்கு மூலையில் 1836 இல் இப்பாடசாலை சிறிய கட்டிடத்தில் 7 மாணவர்களுடன் திரு.வேலாயுதம் உபாத்தியாரைத் தலைமையாசிரியராகக் கொண்டியங்கி, அக்கால மரபுப்படி வேலாயுதர் பாடசாலை என அழைக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து திருவாளர்கள் திருவிளங்கம், பொன்னையா ஸ்ரோங் ஆகியோரினால் நிர்வகிக்கப்பட்டு அவரவர்கள் பெயரைத் தாங்கிய பாடசாலையாகவே மிளிர்ந்தது. இக்கால கட்டத்தில் திரு.வைரவநாதரால் வைத்தியசாலையின் வடகிழக்கு மூலையில் மத்திய பாடசாலை என்ற பெயரில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. வைரவநாதர் பேஜ் என்பவர் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். இப்பாடசாலை ”பேஜ்” பாடசாலை என்று அழைக்கப்பட்டது.

வேலாயுதர் பாடசாலை, பேஜ் பாடசாலை என வெவ்வேறாக அழைக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளும் 1900 ஆம் ஆண்டில் திரு.ம.தானியல் தலைமையில் மெமோறியல் பாடசாலையாக ஒன்றிணைக்கப்பட்டன. வடக்கே ஆங்கிலம் போதித்த மிகத் தொன்மையான பாடசாலையான எமது மெமோறியல் மிஷனரியைச் சேர்ந்த திருவாளர்கள் ஸ்கொட், பிக்னல், பங்கர், புக்வோல்டர் போன்ற முகாமையாளரினால் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வந்தமை நன்றியுடன் ஞாபகார்த்தப்படுத்தப்பட வேண்டியதே. திரு. ஸ்கொட் என்பவர் கல்வியதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில் அதாவது பாடசாலை ஆரம்பித்த 50 வருடங்களில் இப்பாடசாலைக்கு வருகை தந்து ”அகில இலங்கை ரீதியில் ஒழுக்கம், கல்வி, புறக்கருமங்கள் ஆகிய துறைகளில் இப்பாடசாலை முதன்மை இடம் வகிக்கிறது”என்ற உத்தியோக ரீதியான குறிப்பை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி :  கிறீன் ஞாபகார்த்த ஆங்கில பாடசாலை இணையம்

மேலதிக விபரங்களுக்கு கிறீன் ஞாபகார்த்த ஆங்கில பாடசாலை

Sharing is caring!

Add your review

12345