மூதறிஞர் பண்டிதர் க.நாகலிங்கம்

அளவெட்டிக் கிராமத்தின் மூத்த கல்வியலாளரும் மூதறிஞருமான பண்டிதர் க.நாகலிங்கம். 92 வயதில் காலமானார். சிறந்த தமிழ் அறிஞரும் இலக்கண வித்தகருமான இவர் ஈழத்தின் பண்டித பரம்பரையின் முன்னோடிகளுள் ஒருவராவார்.ஆசிரியத் தொழிலினூடாக ஏராளமான நன்மாணாக்கர்களை உருவாக்கிய இவர் அளவெட்டிக் கிராமத்தின் தலைமகனாக மதிக்கப்பட்டார். கிராம மட்ட அமைப்புக்கள் பலவற்றிலும் குறிப்பாக மகாஐன சபை மற்றும் அளவெட்டி மல்லாகம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் கும்பழாவளை
ஆலய திருப்பணிச் சபை அளவெட்டி வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் அளவெட்டி வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் என பல அமைப்புக்களின் தலமைப் பதவியை பல தடவைகள் அலங்கரித்தவர். அதுமட்டுமன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினராக தந்தை செல்வநாயகத்துடன் இணைந்து செயற்பட்ட இவர் கட்சியின் வலிகாமம் வடக்குப் பகுதி பிரிவின் தலைவராகவும் விளங்கினார். எழுத்திலக்கிய பணியில் செந்தமிழ் இலக்கண விளக்கம் எனும் பெயரில் நான்கு இலக்கண நூல்களையும் வெளியிட்டிருந்தார். அமரர் தொகுத்து உருவாக்கிய அளவெட்டிக் கிராமம் பற்றிய வரலாற்று நூலான வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம் எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. சமூகத்துக்கு சிறந்த மனிதனாகவும் தன் குடும்பத்துக்கு சிறந்த தலைவனாகவும் விளங்கிய இவரின் மூத்த மகன் வேதநாயகன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக கடமையாற்றுவதுடன் இளைய மகன் கேதீஸ்வரன் அருணோதயக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றுகின்றார். இளைய மகள் கலாமதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளராக கடமையாற்றுவதுடன் மகள்மார் இருவர் ஆசிரியைகளாகவும் கடமையாற்றுகின்றனர்.

Sharing is caring!

Add your review

12345