யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம்

நல்லை நகர் ஆறுமுக நாவலரின் தமிழ், சமய வளர்ச்சியில் ஆரம்பிக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாலயங்களில் ஒன்றாக 1875 ஆம் ஆண்டு யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. சதாவதானி நா.கதிரவேற் பிள்ளை, பாரதியின் ஞானகுருவான அருளம்பல சுவாமிகள் போன்ற தமிழ் அறிஞர் களும், ஞானிகளும் கல்வி கற்ற பெருமைக்குரியது. பிற்காலத்தில் வே.தா.சி. சிவகுருநாதன், கற்கண்டுப் பண்டிதர் பொன்.கிருஸ்ணபிள்ளை, கவிஞர் யாழ்ப்பாணன்(திரு.வே.சிவக்கொழுந்து), பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் ந.சண்முகலிங்கம், வை.கா.சிவப்பிரகாசம் போன்ற பெரியார்களையும் வளர்த் தெடுத்த பெருமைக்குரியது எமது பாடசாலையே. இவ்வாறு பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வித்தாயின் தற்போதைய வளர்ச்சி நிலைகள், கல்விநிலைகள், தற்போதைய மாணவர்களின் கல்விப் பாரம்பரியங்கள், மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் போன்ற வற்றை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற பழைய மாணவர்கள், கல்வியியலாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதை மையமாகக் கொண்டு இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு : Melaipuloly Saivapragasa Vidyalayam
நன்றி : யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலய இணையம்

Sharing is caring!

Add your review

12345