யா/விக்ரோறியா கல்லூரி

19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சமய விளிப்புணர்வுகளை ஏற்படுத்திய காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் ஆங்கில மூலமான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வகையில் கனகரத்தினம் முதலியார் அவர்களால் 1876 ம் ஆண்டில் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலை நிறுவப்பட்டது. அங்குள்ள பழைய மணி ஒன்றில் 1880 என எழுதப்பட்டுள்ளது. பின்னர் 1892 ம் ஆண்டில் இலங்கையிலே அரசாங்கத்தால் உதவி வழங்கப்படும் ஆங்கில பாடசாலையாக இருந்தது. விளையாட்டுத் துறையும்
விருத்தி செய்யப்பட்டு 1899 ல் யாழ் இந்துக்கல்லூரியுடன் இப்பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் போட்டி நடைபெற்றது. 1898 ல் பாடசாலை மகஸின் ஒன்றை வெளியிட்டார்கள். 1905ம் ஆண்டில் சேர் கென்றி பிளேக் அவர்கள் தலமையில் நடைபெற்றது. அன்று அவரால் புதிதாக கட்டப்பட்ட றிச்வே மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் அதிபர் வில்லபி சிமோல். 1938ல் உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டு மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் கலைப்பிரிவில் முதல் மாணவனாக பல்கலைக்கழகம் சென்றார். 1946ல் அரசாங்கத்தால் பாடசாலை முற்றாக எடுக்கப்பட்டது. பின்னர் நல்ல வளர்ச்சி அடைந்து பல துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர்.

நன்றி :  விக்ரோறியா கல்லூரி இணையம்

மேலதிக விபரங்களுக்கு Victoria College

Sharing is caring!

Add your review

12345