ரம்மியமான குடிசை

ரம்மியமான குடிசை ரம்மியமான குடிசை

எவ்வளவுதான் நாம் முன்னேறினாலும் இயற்கைக்கு முரனாக செல்லுமிடத்து மனித வாழ்விற்கு ஒரு அச்சுறுத்தலாகவே அமையும். ரம்மியமான குடிசை ஆனது எம் முன்னோர்கள் எமக்குத் தந்த முதுசம். தற்போதும் கூட கிராமப்புறங்களில் காணக்கூடியதாக உள்ளது. பனை அல்லது தென்னை ஓலையால் கூரை வேயப்பட்டு மண்சுவரும் வரிஞ்ச கருக்கு மட்டையும் கொண்டமைந்த இக்குடில்கள் சுவாத்தியம் மிக்கவை.

 பனை ஓலையை பதப்படுத்துதல்

பனை ஓலைகளை வெட்டி சிறிது நேரம் வெயில் காய்ச்சலின் பின் தொடர்ச்சியாக வரக்கூடியவாறு சற்று ஒன்றன் மேல் ஒன்று வரக்கூடியவாறு அடுக்கி ஓலையை படிய விடப்படும். இவ்வாறு செய்வதால் தான் மட்டமான, கூரையை வேயக்கூடியவாறு ஓலையை பெற முடியும். பல்வேறு முறைகளில் கூரை வேயும் முறைகள் பாவனையில் உண்டு. மட்டையுடனோ அல்லது மட்டை அகற்றியோ வேய முடியும். இவ்வோலையை கொண்டு வேலியும் அடைக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் ஒன்று அல்லது இரண்டு வருடங்களின் பின்னர் கூரை ஓலை பொதுவாக மாற்றப்படும். சிலது அதை விட கூடிய காலங்களும் இருக்கும். இவ்வாறு அகற்றப்படும் கூரை ஓலையை விவசாய நிலங்களிற்கு பசளையாகவும் பாவிக்க முடியும்.

கிடுகு

அதுபோல் தென்னை ஓலையை நன்கு ஊறவிட்டு இரண்டு கீலமாகப் பிளந்து பின்னுவதன் மூலம் கிடுகு தயாரிக்கப்படுகிறது. இதுவும் கூரை வேயவோ வேலி அடைக்கவோ பாவிக்கப்படுகிறது. இவ்வாறு வேய்ந்து எருவாக்கப்பட்ட குடிசைகளில் காற்றாடிகள் தேவையில்லை குளிரூட்டிகள் தேவையில்லை இயற்கையான மெல்லிய தென்றல் எப்போதும் வீசிக் கொண்டிருக்கும். நகரப்புற உல்லாச விடுதிகளுக்குச் சென்றால் தெரியும் அங்கு இவ்வாறான ரம்மியமான குடிசை பல அமைத்திருப்பார்கள். இதன் மகிமை உணர்ந்த வெளிநாட்டவர்கள் எல்லாரும் இப்போது இயற்கையை நாடிச்செல்கிறார்கள். அதை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நாமோ இயற்கையை வைத்துக் கொண்டு செயற்கையை நோக்கி அலைகிறோம்.

By -‘[googleplusauthor]’

Sharing is caring!

1 review on “ரம்மியமான குடிசை”

Add your review

12345