வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்

ஈழவள நாட்டின் வட பாகத்திலுள்ள விநாயகர் கோவில்களில் நாவலர் பாடசாலைக்கு அண்மையில் இக் கோவில் அமைந்துள்ளது. பழமையானது. விசேட வரலாறுகளைக் கொண்டது. இங்கு நித்திய நைமித்திய விழாக்கள், அலங்கார உற்சவங்கள், பண்டிகைகள் என்பன மரபு நெறி தவறாமல் நடைபெற்று வருகின்றன.

கந்தபுராணப்படிப்பு, திருவாதவூரடிகள் புராணப்படிப்பு, பிள்ளையார் கதைப்படிப்பு என்பனவற்றோடு சிவராத்திரி, நவராத்திரி, திருவெம்பாவை போன்ற சிறப்பு வழிபாடுகளும் கூட்டுப்பிரார்த்தனை, திருமுறை ஓதல் போன்ற நிகழ்வுகளும் ஒழுங்காக நடைபெறுகின்றன. இவற்றைச் சிறப்பாகச் செயற்படுத்த சைவசமய அபிவிருத்திக் கழகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கழகத்தின் செயற்பாடு சிறப்புற நடைபெற்றதை 1986ல் வெளியிடப்பட்ட வெள்ளிவிழா மலர் நன்கு விளக்கி நிற்கிறது. சைவப்புலவர் திரு.வ. கந்தசாமி இம்மலரைத் தொகுத்துள்ளார். மலரின் சிறப்புக்கு அதில் இணைந்துள்ள படங்களும் சான்று. தென்னகத்துச் சைவப் பெரியார்களும் இப்பணியில் காலத்துக் காலம் வந்து இணைந்துள்ளனர். கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் திருவருள் நிறைந்தவர். இதனை வடநூலார் பகவத் சான்னித்தியம் எனக்குறிப்பிடுவர்.

Sharing is caring!

Add your review

12345