வதிரி பூவற்கரைப் பிள்ளையார் கோயில்

வதிரி என்னும் பிரதேசம் வடமராட்சியில் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற அகழ்வாராட்சியின் போது சுடுமண்ணாற் செய்யப்பட்ட நீர்க் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை போன்றவை தமிழ்நாட்டிலும் காணப்பட்டமையால் இங்கு சோழர் தொடர்புகள் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட வதியூர் என்ற இடத்திற்கும் வதிரிக்கும் தொடர்பு இருக்குமா என ஆய்வுகளும் நடைபெற்றுள்ளன. வதிரி என்பது தனித்துவமான குறியீட்டுப் பெயராகவும் வழங்கப்படுகிறது.

தொடக்கத்தில் ஒரு ஒதிய மரத்தடியில் நடைபெற்ற வழிபாடு பின்னர் சிறு கொட்டிலும் மணியும் கொண்ட வழிபாட்டுத் தலமாயிற்று. பலியிடும் நடைமுறையும் இருந்துள்ளது. காலப்போக்கில் கைவிடப்பட்டது. பிள்ளையார் கோவிலாக மாற்றம் பெற்றது. 1958ல் கற்கோயிலாக நிர்மாணம் பெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பத்து நாள் உற்சவமும் நடைபெற்றது.
கோயிலின் மூலவிக்கிரமான விநாயகர் நேரடியாக ஊரை நோக்காமல் அமைக்கப்பட்டுள்ளார். குடைக்கண் நோக்குடையவராக உள்ளார். தமிழ் நாட்டிலிருந்து ஆன்றோர் பலர் இங்கு வருகை தந்துள்ளனர். கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு சிறப்பாக நடைபெறும். பஐனைப் பாமாலை ஒன்றை கோயில் பரிபாலன சபை 1999ல் வெளியிட்டது. 1998 “பூவற்கரையான் புகழ்” என்ற தொகுப்பும் வெளியிடப்பட்டது.
அப்பர் சரீரத்தொண்டு இந்த கோவிலில் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை நான்கு கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. சித்திரத்தேர் புதிதாகச் செய்யப்பட்டு 2003 தொடக்கம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தேர் வெள்ளோட்ட மலரும் வெளியிடப்பட்டுள்ளது. தேரில் மரபான புராதன வரலாறுகளோடு விநாயகரின் 32 மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய வரலாற்றின் இரண்டு பதிவுகளான பலிநீக்கமும் விடுதலை நடவடிக்கையின் போது தஞ்சமடைந்த பல்லாயிரவரை எவ்விதமான இடையூறுமின்றிக் காத்தமையும் நெஞ்சை உருக்கும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தேர்முட்டியின் கம்பீரத்தோற்றம் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

3 reviews on “வதிரி பூவற்கரைப் பிள்ளையார் கோயில்”

  1. மிருக பலியை தடுத்தவர் திரு.கா.சூரன் இந்த சிற்பமும் தேரில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது………

  2. ஒதிய மரம் அல்ல வரலாற்றுத்தவறுகள் பல‌ உண்டு,

  3. தங்களின் கருத்துக்கு நன்றி. சரியான வரலாற்றை தந்துதவினால் திருத்தி பிரசுரிக்க முடியும்.

Add your review

12345