வாணீபுர வணிகன்
சிலோன் ரேடியோ ரைம்ஸ் – டிசம்பர் 1-14-1952 என்ற வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. மகாகவி ஷேக்ஸ்பியரின் ‘மேர்ச்சன்ற் ஒவ் வெனிஸ்’ என்ற நாடகத்தை ‘வாணீபுர வணிகன்’ என்று பி. சம்பந்த முதலியார் தமிழ்ப்படுத்தினார். அதனை வானொலிக்காக எஸ். சண்முகநாதன் எழுதினார். வி.என்.பாலசுப்ரமணியம் தயாரித்த இவ்வானொலித் தொடரில் பாத்திரங்கள் ஏற்றோர் விபரம் வருமாறு.
சி.சிவஞானசுந்தரம், கே.சிவத்தம்பி, எஸ்.சரவணமுத்து, ரி.கேதீஸ்வரநாதன், வி.என்.பாலசுப்ரமணியம், என்.ஜயநாதன், ஏ.சதாநந்தன், வி.சுந்தரலிங்கம், வி.ஜி.ஏ.கருணைரத்தினம், கே.சொர்ணலிங்கம், எஸ்.சண்முகநாதன், எம்.எஸ்.ரத்தினம், ஞான தீபம் சிவபாதசுந்தரம், பிலோமினா சொலமன், தனலக்ஷ்மி சின்னத்துரை.
1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, இல் இரவு 8மணி – 8.30 வரை சிலோன் றேடியோவில் ஒலிபரப்பாகியது.
By – Shutharsan.S
ஆவணம் தந்துதவியவர் – எழுத்தாளர் நந்தி (பேராசிரியர். சி சிவஞானசுந்தரம்)