விழிசிட்டி அறிஞர் செ.சிவசுப்பிரமணியம்

விழிசிட்டி அறிஞர் செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நகுலகிரிப் புராணத்திற்கு விரிவான உரை எழுதியுள்ளார். இந்நூல் கீரிமலை நகுலேஸ்வரர் மீது புன்னாலைக்கட்டுவன் கவிஞர் சிகாமணி கா.அப்பாசாமி ஐயர் அவர்களாற் பாடப்பட்டது.  பதினொரு படலங்களையும் 628 விருத்தப்பாக்களையும் கொண்டது. அறிஞர் சிவசுப்பிரமணியம் அவர்கள் சிறந்த ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தவர். இவரது உரைச்சிறப்பை

“இவர் முகத்திலே சிவப்பொலிவும், அகத்திலே சிவமணமும், வாயிலே சிவவார்த்தையும் மிளிர்வதை யாவரும் அறிவர். இத்தகைய பெருமக்களே உரை எழுதத்தகுதி வாய்ந்தவர்கள், மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் தான் இத்தகைய பாடல்களுக்கு உரையெழுதும் ஞானப்பக்குவம் உடையவர். ஆகவே மேற்படி ஆசிரியர் அவர்கள் இப்பணியை மேற்கொண்டது சாலச்சிறந்ததாகும்”

எனக் கலாநிதி சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் குறிப்பிட்டிருப்பது நோக்கத்தக்கது.

இவர் அவ்வப்போது பாடிய பக்திப் பிரபந்தங்கள் யாவும் இவரது நினைவாக “இறைமணிமாலை” எனும் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Sharing is caring!

Add your review

12345