விழிப்புலன் வலுவிழந்தோர் நிலையம் (வாழ்வகம்.)

இணுவில் கிராமத்தின் வடபால் காங்கேசன் துறை வீதியிலிருந்து சபாவதிப்பிள்ளை வீதியாகிய குறுந் தெருவின் 150 மீற்றர் தொலைவில்  வாழ்வகம் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்ட மாச் மாதம் ஒன்பதாம் திகதி சொந்தக் கட்டிடத்தில் ஆரம்பமானது. வாழ்வகம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு தௌ;ளிப்பளையில் பத்துப் பிள்ளைகளுடன் ஆரம்பமானது. பிறைலி கல்வி முறையும் ஆசிரிய பயிற்சியும் முடித்த செல்வி சின்னத்தம்பி அன்னலட்சுமி நிர்வாகப் பொறுப்பையும் தலமைத்துவத்தையும் ஏற்றுக்கொண்டு நிர்வாக சபையையும் ஏற்படுத்தினார். 1990 இல் போர்ச் சூழல் காரணமாக தெல்லிப்பளையிலிருந்து இடம் பெயர்ந்து உடுவிலில்  1995 ஆண்டுவரை பல சிரமத்தின் மத்தியில் இது இயங்கியது. இறுதியில் ஏற்பட்ட இடம் பெயர்வு காரணமாக சகல உடமைகளையும் இழந்து பிள்ளைகளை தொடந்து பராமரிக்க முடியாமல் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நிர்வாக உறுப்பினர் சிலரின் முயற்சியால் மீண்டும் மானிப்பாயில் 19-01-1998 இல்  ஆரம்பிக்கப்பட்டு பல க~;டங்களின் மத்தியில் இயங்கி வந்தது. சமூக சேவை பகுதியினரது ஆலோசனைப் படி காணி ஒன்றைக் கொள்வனவு செய்ய முயன்றனர். இவர்களது குறையை தீர்க்க  செஞ்சொற் செல்வன் ஆறுதிருமுருகன் அவரது முயற்சியால் லண்டன் வாழ் பரோபகாரிகளால் 32 பரப்பு நிலம் வாங்கி கையளிக்கப்பட்டது. அதற்காக அரச செலவில் RAAN அமைப்பின் உதவியுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு 09-03-2002 இல் சிறப்புடன் இயங்க ஆரம்பித்தது.
2002 இன் தகவல்படி 32 விழிப்புலன் அற்ற பிள்ளைகள் தங்கி நின்று கல்வி பயின்றனர். 7வயது முதல் 21 வயது வரையான பிள்ளைகள்  எந்தவித வேறுபாடுமின்றி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு வகையான கலைப் பயிற்சிகளிலும் இம்மாணவர்கள் தேர்சியுடையவராக விளங்கினர். ஒருவர் சட்டக் கல்லூரியிலும் மூவர் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்று வருகின்றனர். விஷேட பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர் இருவர்; வாழ்வகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பட்ட போட்டிகளிலும் மாணவர்கள் கோட்டம், வலயம், மாவட்டம் என்ற ரீதியிலும் பரிசுகள் பெற்றுள்ளனர். இணைப் பாடவிதமான செயற்பாடுகளிலும் பண்ணிசை, மிருதங்கம், சங்கீதம், விளையாட்டு போன்ற போட்டிகளிலும்  வெற்றியீட்டி சிறப்படைந்துள்ளனர். கு.ஜெகதீஸன்  பண்ணிசை, சங்கீதம் என்பவற்றில் 10 இற்கு மேற்பட்ட தங்கப் பதக்கம் பெற்றுள்ளனர். சென்ற 2 ஆவது உலக இந்து மாநாட்டிலும் பங்கு பற்றி வாழ்வகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.  இந்துக் கலாசார அமைச்சினால் பல்வேறு பட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்வகத்திலே அமைவு பெற்றுள்ள காணியிலே வாழை, தென்னை, மற்றும் உப உணவுப் பொருட்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. விளை பொருட்கள் சேமிக்கப்பட்டு எஞ்சியவை விற்கப்படுகின்றன. சமூக சேவைத்திணைக்களம் இம்மாணவர்களிற்கு தலா 300.00 ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றது. வலி தென்மேற்கு பிரதேசசெயலக சமூக சேவைத்திணைக்கள உத்தியோகத்தரது செயற்பாடு உயிர்த்துடிப்புடன் செயற்பட வைத்தது.
வருடம் ஒருமுறை பிள்ளைகளை சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களால் செலவு செய்யப்படும்  பணம் யாவும் பதிவு செய்யப்பட்ட கணக்காய்வாளரால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. தைப்பொங்கல், வெள்ளைப்பிரம்பு தினம் என்பன சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. செல்வி அன்னலட்சுமி அவர்கள் இப்பிள்ளைகளிற்காகவே திருமணம் செய்யாது பிள்ளைகளிற்கு உறுதுணையாக இருந்து வந்து இறைபதம் அடைந்துவிட்டார். அன்னை அவரது செயற்பாடே வாழ்வகத்தினை இணுவிலில் மிளிர வைத்தது.

நன்றி :மூ.சிவலிங்கம்
சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345