வெளிச்ச வீடு -கவிதையும் படமும்

வெளிச்ச வீடுஅலை மேவி கடல் கடந்து
உலகளந்த கடலோடி
திசை மயங்கப்
புகல் தேடும் கணமதில்
வழி காட்டி மனம் குளிர்விக்கும்.

காரிருளில் படகேறி
வலைவீசிக் கை ஓய்ந்து
அடிவானம் வெளிக்கு முன்
நிறைபடகு மீன் சுமந்து
கரை ஏகும் மீனவர்
குடில் மீள வழி காட்டும்.

உவர் மணலில்  குடில் கட்டி
சிறுநண்டின் பொந்தளைந்து
நுரைநீரில் கால் நனைத்து,
மண்ஆழ வேரூன்றும்
அடம்பன் கொடி பற்றி
கரம் சிவந்த காலமதில்..

வெளிச்ச வீடுவிரல் சூப்பி வாயொழுக நின்ற போதில்
முகில் முட்ட நெடு வளர்ந்து
பெருமரமாய் தலை நிமிர்ந்தெம்மை
அசர வைத்த வெளிச்ச வீடு
துயர் சூழச் சிறை போந்து
கம்பி எண்ணும் காலமாயிற்று.

Dr.எம்.கே.முருகானந்தன்.

வெளிச்ச வீடு

 

 

 

 

 

 

 

 

 By – Shutharsan.S

 

 

நன்றி – suvaithacinemaa.blogspot.com இணையம்

Sharing is caring!

Add your review

12345