“வெள்ளைப்பூக்கள்”- குறும்படம்

“வெள்ளைப்பூக்கள்”- குறும்படம்  ஆனது நெடுந்தீவு முகிலனின் படைப்பாகும்.

"வெள்ளைப்பூக்கள்"- குறும்படம்

 8-3-2012 வியாழக்கிழமை காலை 10.35 மணியளவில் யாழ் ஞானம்ஸ் கோட்டலில் யாழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் த.ஈஸ்வரறாஜா தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதம விருந்தினராக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  பன்முக திறமை கொண்ட நெடுந்தீவு முகிலன், இப் படம் இளம் தமிழ் விதவைகளின் அவலத்தை திரையிட்டு காட்டுகிறது எனதெரிவித்துள்ளார். விதவைகளின் அவலத்தை பேசும் இப்படம் மகளீர் தினத்தன்றே (8-3-2012)வெளியிடப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும்.  வெள்ளைப்பூக்கள் குறும்படத்தில் கிருத்திகன் – இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர் இசைப்பிரியன் இக்குறும்படத்திற்கு இசையமைத்துள்ளார் .

இம் முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்.எல்லோருடைய ஒத்துழைப்பும் இந்த கலைஞர்களை  ஊக்கப்படுத்தும்.

நன்றி – மூலம் – நம்கலை இணையம்

Sharing is caring!

2 reviews on ““வெள்ளைப்பூக்கள்”- குறும்படம்”

  1. யாழ்ப்பாண படைப்புகளை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு நன்றிகள். இன்னும் பல தரமான படைப்புகளை உருவாக்கி வருகின்றோம். நன்றி

  2. கிருத்திகன்
    தங்கள் படைப்புகள் சம்பந்தமாக தகவல்களுடன் படங்களும் அனுப்பும் பட்சத்தில் எமது இணையத்தில் வெளியிட முடியும்.

    நன்றி
    யாழ்ப்பாண இணையம்

Add your review

12345