வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம்

வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம்
செந்நெறியோன் பண்டிதர் க. நாகலிங்கம் அவர்களின் பிரதான தொகுப்பில் உருவான வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம் எனும் அளவெட்டிக் கிராமம் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு நூல். இவ்விழாவின் பிரதமவிருந்தினராக யாழ்-பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர்கள் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு வைத்தார்.
செந்நெறியோன் பண்டிதர் க. நாகலிங்கம் அவர்களின் நினைவுப்பேருரையினை செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களும் நூலிற்கான ஆய்வுரையினை ஸ்கந்தவரோதயாக் கல்லூரி ஆசிரியர் திரு.பார்வதிநாதசிவம் மகாலிங்கசிவம் அவர்களும் நிகழ்த்தினர்.
அளவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்த திறமையாளர்கள் பலரது வாழ்வியற் தொகுப்பாக வெளிவந்த இந் நூல் அளவெட்டிக் கிராம ஆலயங்களின் வரலாற்றையும் தாங்கி வெளிவரவுள்ளது. அளவெட்டி மகாஜன சபையின் வெளியீடாக வரும் இந் நூல் சுவிற்சர்லாந்து வாழ் அளவெட்டி மைந்தன் செல்லத்துரை சிவபாலனின் நிதி பங்களிப்புடன் நூலுருப் பெற்றுள்ளது.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345