வேலணை சிற்பனை முருகன் ஆலயம்

சிற்பனை முருகன்

சிற்பனை ஆலயம் 1880களுக்கு முன்னர் வேலணைக் கிராமத்தில் இருந்த முருகன் ஆலயங்களுள் பள்ளம் புலம் முருகமூர்த்தி ஆலயத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது. இவ்வாலய வரலாறு பற்றி தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் தகவல்கள் தரவுகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்தில் இவ்வாலயம் கந்தபுராண படிப்பு மடமாக இருந்து பின்னர் இம்மடம் ஆலய வடிவம் பெற்றிருக்கிறது. இவ் வாலயத்தை நிறுவுவதற்கும், தக்கவைப்பதற்கும் இக்கிராமத்து மக்கள் பெரும் அர்ப்பணிப்பு செய்திருக்கின்றார்கள். 19, 20ஆம் நூற்றாண்டில் , இவ்வாலயத்தின் வளர்ச்சியுடன் திரு. கந்தவுடையார், திரு. சுப் பிரமணிய விதானையார், திரு வைத் தியநாதர் செல்லையா, திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை, திரு. துரையப்பா பொன்னம்பலம், திரு. வைத்தியநாதர் செல்லையாவின் மகன் திரு. வை. செ. சோமாஸ்கந்தண்,  திரு. வா. அருணகிரி ஆகியோர் பெரும் பங்காற்றி உள்ளனர். ஆலயத்தை இன்றைய அமைப்பிற்கு கொண்டு வந்ததில் அமரர் அருணகிரியின் பங்கு மிகப் பெரிய தொன்றாகும்.

இம் முருகன் ஆலயம் வேலணை மேற்கில் சிறப்புற வளர்ச்சி பெற்று வந்தபொழுது 1990களில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் தளர்வுற்றபோதும் மீள் குடியேற்றத்துடன் இன்று பல வழிகளில் வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். வருடாந்த உற்சவம் முக்கிய சமய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆலய செயற்பாட்டில் கிராம மக்கள் முழுமையாகப் பங்கு கொள்ளும் நிலையைக் காண முடிகின்றது. ஆலயம் ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்டு வருவதும், திரு. வை. செ. சோமாஸ்கந்தன் ஆயுட்கால தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆலயமும் அதன் அமைப்புவிதிகளும்

சூரபத்மனைச் சங்காரம் செய்தவேல் ஆகாய கங்கையில் நீராடிக் கந்தனை வந்தணைந்த இடம் வேலணை என்பது ஐதீகம். இவ்வேலணையின் மேற்பால் மத்தியில் அமைந்த கோவிலே சிற்பனை முருகன் ஆலயமாகும். இவ்வாலயம் ஏறத்தாழ நூற்றைம்பது வருடங்களின் முன் கந்த உடையார் என்ற சைவ பக்தரின் பூசை மடமாக இருந்ததாகக் கூறுவர். இம்மடத்தில் கந்தஉடையாரால் தாபனம் செய்து வணங்கப்பட்ட வேல், பின்னர் வேல் கோவிலாகி இன்று சிற்பனை முருகன் ஆலயமாக விளங்குகின்றது. கந்த உடையார் தமக் குப் பின இக்கோவிலை நிருவகிக்கும் பொறுப்பை அவரது அபிமானியாகிய விக்கல் விதானை என எல்லோராலும் அழைக்கப் பட்ட சுப்பிரமணிய விதானையிடம் விட்டுச் சென்றார். சுப்பிரமணிய விதானையார் அதிகார தோரணை கொண்டவர்;

சைவசமயப்பற்று மிக்கூரப் பெற்றவர். இவர் அச்சக வசதிகள் அற்ற அக்காலத்தில் நான்கு தடவைகள் கந்தபுராணத்தை தம் கையெழுத் தில் பிரதி செய்ததால் கந்தபுராணத்தை மனனம் செய்தவராகக் கொள்ளப்பட்டார். இவரின் உந்துதல் காரணமாகவே அண்மைக்காலம் வரை எம் ஆலயம் கந்தபுராணம் படித்து பரப்படும் ஆலயமாகத் திகழ்ந்ததோடு சைவத் தமிழ் அறிஞர்கள் தம் கந்தபுராண அறிவுத் திறனை மோதவிடும் களமாகவும் இவ்வாலயம் இருந்து வந்துள்ளது. சுப்பிரமணிய விதானையார் தமக்குப் பின் தம்மிடம் மிக ஈடுபாடுற்ற திரு. வைத்திய நாதர் செல்லையாவிடம் ஆலயப் பொறுப்பை விட்டுச் சென்றார்.

திரு. வை. செ. அவர்களிடம் இருந்த ஆலய நிருவாகப் பொறுப்பு சிறிது காலத்திற்கு பிடியரிசித் தொண்டுமூலம் ஆலய திருப்பணி செய்து வந்த பிள்ளைச் சாமி என யாவர்க்கும் அறிமுகமான திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை அவர்களுக்கும், திரு. துரையப்பா பொன்னம்பலம் அவர்களுக்கும் கைமாறி மீண்டும் திரு. வை. செ. அவர்களிடம் வந்து சேர்ந்தது. திரு. வை. செ. அவர்களின் மறைவின்பின் அவரது தனயனும் பரிபாலன பையின் ஆயுட்கால தலைவருமான திரு. வை. செ. சோமாஸ்கந்தன் அவர்கள் ஆலய நிருவாக பொறுப்பைப் பெற்றார். இவரது நிருவாக காலத்தின் பிற்பகுதியில் இன்றைய பரிபாலன சபையின் மூத்த காப்பாளராகிய திரு. வா. அருணகிரி – சமாதான நீதவான் அவர்கள், ஆலய நிருவாக சபையில் பெரும் பங்கு கொண்டு உதவினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆலயம் பெருவளர்ச்சி காணவேண்டிய காலத்தில் இறுக் கமான தனி நபர் நிருவாகமோ அல்லது கூட்டுப்பொறுப்பு நிருவாகமோ இல்லாததால் ஆலய திருப்பணிகளுக்குப் பெருந்தனம் வழங்கும் அவாக்கொண்டவர்கள் பலர் இருந்தும் அவர்களது சக்தியை ஒன்று திரட்ட முடியாத நிலை நீடித்தது.திட்டமிட்ட, ஒருங் கிணைந்த, முறையாக நெறிப்படுத்தப்பட்ட வளர்ச்சி இன்றி ஆலயம் பின்னோக்கியது. இந்நிலையில் பல தோல்விகளின் மத்தியில் திரு. சே. க. நாகையா அவர்களின் முயற்சியால் திரு. வை. க. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் சிற்பனை முருகன் ஆலய புனருத்தாரண சபை 09 – 06 – 1984இல் உருவானது. ஆலயத் தை புனர் நிருமாணம் செய்து அதன் கும்பாபிஷேக, மண்டலாபிஷேக பணிகனை பூர்த்தி செய்யும் ஒரே நோக்குடன் உருவான மேற்படி சபையைத் தொடர்ந்து பின்வரும் பிரேரணை மூலம் 15 -12 – 1985இல் “சிற்பனை முருகனி ஆலய பரிபாலன சபை” ஏகமனதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

“15 – 12 – 1985 ஞாயிறு மாலை, வேலணை மேற்குச் சிற்பனை முருகன் ஆலயத்தில் கூடியுள்ள அவ்வாலய நித்திய விஷேட பூசைகளின் பொறுப்பாளர், நிதியுதவி அளித் தோர், திருவிழாக் காரர், வழிபடுநர் ஆகிய நாங்கள் இன்று தொடக்கம் “சிற்பனை முருகன் ஆலய பரிபாலன சபை” என்ற பெயரில் நிறுவன ரீதியாக இயங்கி, வியத்தகு வளர்ச்சி பெற்றுவரும் எம் சிற்பனை முருகன் ஆலயத்தையும், அதன் சொத்துக்களையும் பேண, பராமரிக்க, நிருவகிக்க, அபிவிருத்தி செய்ய இத்தால் இறைபக்தியுடன் முடிவு செய்கின்றோம்.”

பரிபாலன சபையின் மேற் கூறிய அங்குரார்ப்பண கூட்ட தீர்மானத்திற்கமைய, இருபத்தொரு உறுப்பினர் கொண்ட அமைப்பு விதி தயாரிப்புக் குழுவிடம் சபையின் அமைப்பு விதிகளைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. இக்குழுவின் மூன்று உறுப்பினர் தவிர்ந்த ஏனையோரின் பங்களிப்பில் ஒருமனதாக வரையப்பட்டு, சபையின் 29-06-86ஆம் தேதிய விஷேட பொதுக் கூட்டத்தால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு, அத்திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்த சபையின் அமைப்பு விதிகளைப் பிரசுரிப்பதில் நிருவாக சபை பெருமகிழ்வடைகின்றது.

இதுகாறும் ஆலயத்தோடு நெருங்கிய ஈடுபாடு கொணி ட அடியார்களினி பிணைப் பை அந்நியப்படுத்தாது பாதுகாக் கும் வகையில் , நான்கு பிரிவுகளைக் கொண்ட உறுப்புரிமையும், சிறிது சிரமமான நிருவாகசபைத் தேர்தல் முறையும் அமைப்பு விதிகளின் விசேட அம்சங்களாகும். பொது நிறுவனங்களில் காணப்படும் நிதி முகாமைத்துவ குறைபாடுகளை சபை தவிர்க்கும் பொருட்டு ஏற்ற ஏற்பாடுகளையும் அமைப்பு விதிகள் கொண்டுள்ளன. இவ்வமைப்பு விதிகள் நாட்டின் சமூக பொருளாதார மாற்றங் களுக்கு இடமளித்து ஆலய வளர்ச்சிக்கு நல்ல அடித்தளமாக அமையும் எனச் சபையின் நிருவாக சபை நம்புகின்றது.

 

Sharing is caring!

Add your review

12345