வேலி

ஒவ்வொருவரும் தங்களது வளவுகள், காணிகளை பாதுகாப்பதற்காகவும் அறுக்கையிடுவதற்காகவும் வேலிகளை அமைக்கின்றனர். ஏற்கனவே கல்லால் அமைக்கப்படும் வேலி “பகிர்” என்ற கட்டுரையை பார்வையிட்டுள்ளோம். அதைப்போலத் தான் மரக் கதியால்களை நட்டு வேலிகளை அமைக்கும் நடைமுறை இப்பவும் காணப்படுகின்றது. முள்முருக்கு, கிளுவை, சீமைக்கிளுவை, பூவரசு போன்றன பொதுவாக பாவிக்கப்படும் மரங்களாகும். இவை பாதுகாப்பு வேலியாக உள்ளதுடன் கால்நடைகளின் உணவாகவும், விறகுத் தேவைக்காகவும் பயன்படுகிறது. இவ்வேலியை மேலும் மறைப்பாக அமைப்பதற்கு கிடுகு, பனை ஓலை, கருக்கு மட்டை, அலம்பல் செடி போன்றவற்றைக் கொண்டு அடைக்கப்படுகின்றது. தற்போது சீமைந்துக் கற்களைக் கொண்டு மதில்கள் அமைக்கப்படுகின்றது. எனினும் இயற்கைச் சுவாத்தியமான வாழ்விற்கு வேலிகளை மரங்களைக் கொண்டு அமைப்பதே சிறந்தது.

Sharing is caring!

Add your review

12345