வைத்தியர் ஐயம்பிள்ளை

வைத்தியர் ஐயம்பிள்ளை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள  சப்த தீவுகளில் அனலைதீவும் ஒன்றாகும். அந்த அனலை மண் பெற்றெடுத்த வைத்திய கலாநிதி ஐயம்பிள்ளை சோமசுந்தரம் தனது ஆரம்ப கல்வியினை அனலைதீவு சதாசிவ ஆங்கில பாடசாலையில் கற்றுள்ளார்.

இவர் தனது மருத்துவக்கல்வியை சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரியில் பெற்று பல்வேறு திறமைச் சித்திகளுடன் L.M.S பட்டம் பெற்றார். எமது கிராமத்திலிருந்து வந்த முதல் மருத்துவர் என்ற பெருமை இவருக்கே உரியதாகும். இவர் தனது முதல் பதவியினை மலேசியா நாட்டின் பினாங் நகரில் (Penang City) 01-02-1931 ம் ஆண்டு மேற்கொண்டார்.

முழுப்பெயர் : Dr. ஐயம்பிள்ளை சோமசுந்தரம்
பிறப்பு : 20-12-1896
இறப்பு : 1960
பிறப்பிடம் : அனலைதீவு
வாழ்விடம் : மலேசியா
தொழில் : வைத்தியர் (Doctor)

கல்வித்தகமை : L.M.S

இவர் ஆரம்ப கால சம்பளமாக 250 RM (வெள்ளி) பெற்றுக்கொண்டார். எளிமையான வாழ்வியலுக்கு எடுத்தக்காட்டாக தனது கடமைக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியினை ஆரம்ப காலத்தில் பாவித்து வந்துள்ளார். அறிவும், அமைதியான பண்புமுள்ளமையால் மக்களினது நன்மதிப்பிற்கு ஆளானார்.

அனலையில் கல்வி சேவை:-

அனலைதீவில் அன்றைய கால கட்டத்தில் சேவையாற்றிய பாடசாலையான சதாசிவ பாடசாலையினது முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர்களில் இவரும் ஒருவராவர். ஆரம்ப காலத்தில் இவரது வீட்டிலே இப்பாடசாலை இயங்கி வந்தது. மண்சுவரும், ஓலையாலும் வேயப்பட்டிருந்த இப்பாடசாலையை மிகப்பிரமாண்டமான நிரந்தரப் பாடசாலையாக மாற்றியமைக்க அரும்பாடு பட்டார்.

மேலும் இவரின் வழிநடத்தலில் ஒரு வித்தியாசங்கம் அமைக்கப்பட்டு அதனூடாக வெளியிடங்களிலிருந்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வரவழைத்து கல்வி நிலையில் தீவக பாடசாலைகளில் இப்பாடசாலை சிறந்த பாடசாலையாக வளர வழிகோலியுள்ளார்.

ஆலயங்கள் புதிதாக அமைப்பதை விட வறுமையாலுள்ளவர்களுக்கு அன்னமிடல் மேலானது என்பர். அதைவிட கல்வியறிவற்றவர்களுக்கு கற்றலுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் கோடி புண்ணியமான செயல் என்பது இவரது உயரிய சிந்தனையாகும். இறக்கும் வரையும் சதா சிவ பாடசாலையினது கல்விக்காக அரும்பாடுபட்டார்.

மலேசியாவில் தழிழ்ப்பணி:-

மலேசியாவில் வாழ்ந்த காலத்தில் சமூகப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டு செயற்பட்டுள்ளார். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோஸ், நேதாஜியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

15-08-1947 இல் இந்தியா சுதந்திரமடைந்த தினத்ததை வெகு விமர்சையாக மலோசியவில் நடாத்திடதுடன் அதனை தானே தலமை ஏற்று நாடாத்தியுள்ளார். தாய் மொழியில் நாட்டங்கொண்ட இவர் ஓர் சிறந்த மேடை பேச்சாளரும் ஆவார். மிகச் சிறந்த எழுத்து ஆற்றல் கொண்ட இவரது படைப்புக்கள் பலவுள.

இலங்கையிலும் மருத்துவப்பணி:-

14-04-1928 இன் காலப்பகுதியில் இலங்கை மருத்துவக் கல்லூரியில் (Medical College of Ceylon) உள்ள பதிவுகளில் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளமை இவரது சேவை அங்கு இடம் பெற்றதனை சான்று பகருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

நிறைவுரை:-

மேலும் இவர் தொடர்பான மேலதிக தகவல்களை தேடிப் பாதுகாக்க வேண்டிய தேவைகள் எமது இளைஞர் சமுதாயத்தினருக்குள்ளது. எனவே இவர் தொடர்பான மேலதிக தகவல்கள் அவருடன் தொடர்புடைய உறவுகளிடமிருப்பின் பரிமாறுவதன் மூலம் இவர் தொடர்பான எதிர்கால ஆய்வுகளுக்கு உறுதுணையாக அமையும்.

By – Shutharsan.S

நன்றி – தொகுப்பு:- அனலையூரான்., தகவல் மூலம்:- அனலைதீவு வாழ்வும் வளமும் – வரலாற்று நூல் – 2008, analaiexpress.ca இணையம்.

Sharing is caring!

1 review on “வைத்தியர் ஐயம்பிள்ளை”

  1. prapa says:

    if you don’t mind change your Logo color light green it is great and appropriate to your concept

    prapa

Add your review

12345