வைத்திய கலாநிதி செல்வி நவமலர் கனகரட்ணம்

26.11.1935இல் பிறந்தார். கொழும்பு மருத்துவ பீடத்திற்கு வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து அனுமதி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையைப் பெற்றவர். 1966இல் M.B.B.S பட்டம் பெற்று வெளியேறினார்.
1968-1972 வரை வவுனியாவிலும், 1973-1974 வரை முல்லைத்தீவிலும் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி மக்களுக்கு சேவையாற்றினார்.

1979இல் இங்கிலாந்து சென்று பணியாற்றினார். 1981-1986 மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றினார்

யாழ்ப்பாணம் சட்டமருத்துவ அதிகாரியாக 1986-1990 காலப்பகுதியில் நியமிக்கப்பட்டார். 1997-2003 வரை பல்கலைக்கழக பேரவையில் அங்கத்தவராக செயற்பட்டார். லண்டன் கேன்(CANE) புற்றுநோய் காப்பகத்தின் பணிப்பாளர் சபை தலைவராக உறுப்பினராக இருந்து சேவையாற்றினார். மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவராக இருந்து2001-2002ம் ஆண்டில் தலைவராக பணியாற்றி 306B மாவட்டத்தின் சிறந்த தலைவருக்கான பரிசு பெற்றார். இவர் சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாகுட்டியின் பிரியத்திற்குறிய தோழியாவார்.

யாழ்ப்பாணபல்கலைக்கழகம் 2005ல் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது. நவமலர் கனகரட்ணம் அவர்கள் 11.05.2008 அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.

நன்றி-மூலம் – www.suthumalai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345