ஸ்ரீ ஜெய நீராவி வீரகத்தி விநாயர் கோவில்

இக் கோவில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையானது. ஓல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் திறைசேரித் தலைவராக இருந்த பூலோக முதலியார் பரம்பரையினரே இக்கோவிலின் அறங்காவலராவர். விக்கிரகம் வேதாரணியத்திலிருந்து எழுந்தருளப் பிள்ளையார் கோவில் பற்றிய விபரங்கள் பதியப்பட்டுள்ளன.

மூன்று காலப்பூசையுடன் நித்திய நைமித்தியங்களும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றன. ஆரம்பத்தில் கிடுகுக் கொட்டிலில் வீற்றிருந்த விநாயகர் படிப்படியாக வளர்ச்சியடைந்த அழகிய கோவிலில் உறைகின்றார். 1974 இலும் 1989 இலும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 8.6.89ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. 25.7.89 மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவன்று மலர் ஒன்றும் வெளியிடப்பட்து.
1979 ஆம் ஆண்டில் ‘நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா’ நூல் உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இருபாலைச் சேனாதிராய முதலியார் கலிவெண்பாவைப் பாடியவர். வித்துவான் நா. சுப்பையா உரை எழுதியுள்ளார். இம்மலரில் ஸ்ரீ ஐய நீராவி வீரகத்தி விநாயகர் திரவிரட்டை மணிமாலை, நீர்வாவி வீரகத்தி விநாயகர் நான் மணிமாலை, வண்ணை நீர்வாவி வீரகத்தி விநாயகர் அட்டகமாலை, வண்ணை ஸ்ரீ ஐய நீர்வாவி வீரகத்தி விநாயகர் எச்சிக்கை, வாவி, பராக்கு, மங்களம், விநாயகர் விருத்தம் என்பன இணைக்கப்பட்டுள்ளன.
ஆலய வரலாறும் கட்டுரைவடிவில் உள்ளது. அதில் பின்வரும் குறிப்பு உண்டு.

“யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கிறையில் ‘பருத்திப்புலம்’ என்னும் காணியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ nஐய நீராவி வீரகத்திப் பிள்ளையார்.” இங்குள்ள நீராவி குருக்கள் மடம் சமயச் செயற்பாடுகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இவ்வாலத்தில் திருமதி செல்லம்மா வைத்திலிங்கம் அவர்களால் நடாத்தப் பெற்ற புராணபடனம் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Add your review

12345