ஸ்ரீ பரராஐசேரப் பிள்ளையார் கோவில்

ஸ்ரீ பரராஐசேரப் பிள்ளையார் கோவில்


யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசன் பரரராஐசேகரனால் வணங்கப்பட்ட சிறப்புடையது இவ்வாலயம். இங்கு மூலமூர்த்தியாக விநாயகர் வீற்றிருக்க பஞ்சமுக விநாயகர், லட்சுமிதேவி, சுப்பிரமணியர், வைரவர், நவக்கிரகம், சண்டேஸ்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள கண்ணன் விக்கிரகம் காலிங்கநர்த்தன வடிவம் கொண்டது. வைகாசிச்சதய நட்சத்திரத்திற் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித்  தேர்த்திருவிழா திருவாதிரை நட்சரத்தில் இடம்பெறும். தீர்த்த உற்சவத்துடன் மகோற்சவம் முடிவடைகின்றது. இங்கு மூன்று தேர்கள் இழுக்கப்படுகின்றன. ஆலயத்திற் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் சிறப்பாகக் காணப்படுகின்றது.

Sharing is caring!

Add your review

12345