அம்மானைக்காய் – பெண்களுக்கான பழந்தமிழ் விளையாட்டுப்பொருள்

அம்மானைக்காய்

அம்மானைக்காய் என்பது பழந்தமிழ் மகளீர் விளையாடும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். ஆண்கள் விளையாடுவதற்குப் பந்து பயன்படுவதைப்போல் பெண்கள் விளையாட இவ் அம்மானைக்காய் பயன்படுத்தினர். சிலப்பதிகாரத்தில் கண்ணகி இவ் அம்மனைக்காய் விளையாடுவது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இன்றும் அனேக கண்ணகி அம்மன் ஆலயங்களில் இவ் அம்மனைக்காயைக் காணலாம். அங்கு இது ஒரு புனிதத் தன்மை கொண்ட சடங்குப் பொருளாகக் காணப்படுகின்றது. இதனுள் மணிகள் காணப்படும் அதிலிருந்து ஒருவித ஒலியும் உண்டாக்கப் படுகின்றது.
மேலும், இவ் அம்மானைக்காய் விளையாட்டுப் பற்றி திருவாசகத்தில் திருவம்மானை எனும் பகுதியில்

“……. அம்கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம்கருணை வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்”

பொருள் : ….. ஞானக் கண்ணுடைய அந்தணன் அவன் அறிய கருணையுடைய அவன் என்னை வழியக் கூவியழைத்து வீடு பேறு அளித்தருளினன். அவனைக் குறித்து நாம் பாடி அம்மானை விளையாடுவோமாக. ….

என சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மானைவரி

அம்மானை என்பதற்குத் தாய், தலைவி, ஆடுங்கருவி, தீ என்ற பொருள் உண்டு. கலம்பலக உறுப்பு, வரிப்பாடல், பெண்பால் பிள்ளைத் தமிழ் உறுப்பு என்ற நிலையிலும் அமைகின்றது. பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை, அவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடல் அம்மானைவரி, அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானை காய், அம்மானைபாட்டு கதைப் பாடலைக் குறிக்கும்.”
தமிழில் அம்மானை என்ற சொல்லுக்குப் பொருள் கதைப் பாடல் எனவும் பொருந்தும். அம்மானை என்ற சொல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் கையாளப் பட்டுள்ளது.

“வீங்கு நீர் உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்காணங் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்காணங் காத்த உரவோன் உயர்விசும்பல்
தூங்கையில் மூன்நெறிந்த சோடின்காண் அம்மானை
சோடின் புகாத்நகரம் பாடலோர் அம்மானை”

பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை. அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானைக்காய். அம்மானைப் பாட்டு என்பது கதைப்பாடலையும் குறிக்கும். மகளிர் இருவர் வினா விடையாக இரு பொருள்படப் பாடுவது அம்மானை மடக்காகும்.

“அம்மானை தம்கையில் கொண்டு அங்கு அணியிழையார்
தம்மனையில் பாடும் தகையேலோர் அம்மானை”

அம்மானைக்காய்

என்றும், அம்மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை என்றும் பாடியுள்ளார்.

Ammanaikai is known as a play tool for women in the ancient time. At the same time ball is a play tool used by men. Ammanaikai is used to play as a ball throwing method. There is a note on ‘Silappathikara’(one of the famous literary creation in Tamil) about this Ammanaikai that the heroine of Silappathikara Kannaki used to play this. Therefore till now we can see this Ammanaikai at Kannaki Goddess temples. This play tool is considered as holy ritual object. It has bells inside. They make sound when Ammanaikai is played.

There is a worthy saying in ‘Thiruvasaham’ about Ammanaikai as ‘Thiruammanai’ a religious poetic creation.

Amkanan Anthanan Aai Araikuvi Veedu Arullum

Amkarunai Vaarkalelei Paduthum kaan Ammanaai”

These lines are in direct Tamil version. It cannot be translated to get the actual effect. But the meaning of these lines is The Almighty God has his third eye and more wisdom. He calls me to give me the holy blessing. I want to praise god with this Ammanai.

Lines of Ammanai

Ammanai carries out the meaning of mother, Directress, play tool and fire. It can be identified as a mixture of different parts of speech, stanzas formed lines and typical Tamil Feminine Kids song. Ammanai lines are like a ballad. It carries out the story of praising god. The use of word ‘Ammanai’ was observed initially in ‘Silappathihara’

Ammanai lines have the special features as question and answering form and builds up a story. One who starts to throw first asks the question to the opponent and the other person throws back Ammanaikai with the answer in poetic lines.

Sharing is caring!

2 reviews on “அம்மானைக்காய் – பெண்களுக்கான பழந்தமிழ் விளையாட்டுப்பொருள்”

  1. Sutha says:

    It is new for me

Add your review

12345