அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்

http://www.aralysmv.com

அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்

அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் பாடசாலையின் வரலாறு. 1912 இல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 1918 இல் தலைமை ஆசிரிரியர் ஒருவர் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டார். 1937ம் ஆண்டில் உயர்தர கனிஸ்ட பாடசாலையாகவும் , 1939 இல் உயர்தர சிரேஸ்ட பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1939 இல் பாடசாலை மேற்குப்புறமாக பெருப்பிக்கப்பட்டது. 1956 ஆம் அண்டு பழைய மாணவர் சங்கம் மூன்று பரப்புக் காணியை வாங்குவதற்கு உதவியது. திரு. தி. இராசசுந்தரம் சமாதான நீதவான் அவர்களால் 20’ x 70’ கட்டடம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. 1960ம் அண்டு அரசாங்கம் பாடசாலையை பொறுப்பேற்றது. 1969 இல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் உதவியால் 80’ x 20’ கட்டடம் அமைக்கப்பட்டது. 1972 இல் இப் பாடசாலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆ.தியாகராசா அவர்களின் பெரும் உதவியினால் பாடசாலையில் க.பொ.த (சாதாரண தரம் ),  விஞ்ஞானப் பிரிவும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டது. அத்துடன் இவரின் உதவியினால் 100’ x 20’ கட்டடம் ஒன்றும் பெறப்பட்டது. 1974 இல் நூற்றாண்டு விழா ஞாபகமாக 80’ x 20’ கட்டடம் ஒன்று அராலி தெற்கு, கிழக்கு கிராம முன்னேற்றச் சங்கத்தினால் அமைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கான இரண்டு பரப்புக் காணியை வாங்க பாடசாலையின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை பேருதவி புரிந்தது. பழைய மாணவரும் உதவிக் கணக்காய்வாளர் நாயகமாகவும் இருந்த திரு. செ. சிவகுரு அவர்களின் பெரு முயற்சியினால் 2005இல் பாடசாலைக்கு 90’ x 25’ அடி இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று கிடைக்கப்பெற்றது. 2011 இல் இன்று யா / அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் திரு. திருமதி. கையிலாசபிள்ளை அவர்களினதும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களினதும் அதிபர் திரு. மாரிமுத்து சோமசேகரம் அவர்களினதும் பெருமுயற்சியினால் தரம் 1C பாடசாலையாக உயர்ந்து விளங்குகின்றது.

அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்
அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்
அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்
அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்

By – Shutharsan.S

மேலதிக விபரங்களுக்கு – http://www.aralysmv.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345