அரியாலை

கிழக்குத் திசையிலிருந்து எழில்மிகு யாழ்ப்பாண நகரினை நோக்கிப் பிரயாணம் செய்வீர்களானால் உயர்ந்து கம்பீரமாக நிற்கும் அழகிய நுழைவாயில் கோபுரத்தைக் காணலாம். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது என மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும். இக் கோபுர வாயிலைக் கடந்து ஒரு சில அடிகள் முன்னோக்கிக் கால் பதிப்பீர்களானால் வடதிசையில் குடாநாட்டின்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்று கோலாக இருக்கும் உப்பு விளைகின்ற நிலமும், கிழக்கே பருவப் பெருமழையை நம்பி நெல் விளைவிக்கும் களனித் தரைகளும், ஆங்காங்கே வானத்தை எட்டிப்படித்து விடுவோம் என வளர்ந்து நிற்கும் கற்பக தருக்களும், சோலையாகக் காட்சி தரும் தென்னை மரங்களும், உயர்ந்து சிறு சிறு பட்டிகளாகக் காட்சி தரும் வெண் மணல் திடர்களும் நிறைந்து இருக்க, அருகே யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கித் தவழ்ந்து செல்லும் கடலேரியும் அமைந்திருக்க, மேலும் தென் திசையில் பாண்டியன் தாழ்வு – கொழும்புத்துறையைச் சென்றடையும் வீதியும், மேற்கே கச்சேரி – நல்லூர் வீதியும், வடக்கே செம்மணி- வீதியையும் எல்லைகளாகக் கொண்டு அழகு மிளிரக் காட்சி தரும் கிராமம் ஒன்றினைக் காணலாம்.

சைவமும் தமிழும் கொஞ்சி விளையாடும் கிராமம்
யாழ்ப்பாண மாநகர சபையின் கிழக்கு எல்லையாகத் திகழும் இக்கிராமம் யாழ்ப்பாண மாநகர சபையின் பெரும் பாகத்தினையும், கிழக்கே
நல்லூர்ப் பிரதேச சபையின் ஓரு பகுதியையும் உள்ளடக்கிய தற்போதைய உள்@ராட்சி அமைப்பின் கீழ்க்கண்ட பிரதேசமாகும். ஏறக்குறைய பத்துச் சதுர கிலோமீற்றர் பரப்பளவாகவும், இருபதினாயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழும் வசிப்பிடமாகவும் அமைந்த பெரு நிலப்பரப்பாகும். அவ்வழகிய அமைப்பினைக் கொண்ட கிராமத்தின் பெயர் அரியாலை ஆகும். சைவமும் தமிழும் கொஞ்சி விளையாடும் இக்கிராமத்தின் சைவப் பேராலயங்களும், சில கிறீஸ்தவ தேவாலயங்களும், பிரசித்தி பெற்ற அரசாங்க பாடசாலைகளும் சமூகத்தின் பெருமையினை எடுத்தியம்பும் சனசமூக நிலையங்களும் நிறையக் காணப்படுகின்றன.

Sharing is caring!

2 reviews on “அரியாலை”

Add your review

12345