இணுவில் இராமநாதேஸ்வரம் பரமேஸ்வரன் கோவில்

இணுவில் கிராமத்தை மையமாக கொண்டு கலை, கலாச்சாரம் என்பவற்றை கருத்திலே கொண்டு 1913 ஆம் ஆண்டளவில் இராமநாதன் கல்லூரியை நிறுவினார். தனது உடல் அடக்கம் செய்வதற்கென பாடசாலை வளாகத்திலே ஒரு இடத்தையும் தெரிவு செய்து அதில் தனது சமாதி கோயில் ரூபத்தில் அமைவு பெற வேண்டும் என்பதற்காக அதற்கான வழிவகைகளையும் செய்தார்.

உரியகாலத்தில் இவர் மறுமை எய்தியதும் கல்லூரி கட்டிடத்தொகுதியின் தென்மேல் திசையில் சமாதி வைக்கப்பட்டது. இச்சமாதியின் மீது ஒரு சிவன் கோயிலை நிறுவ உத்தேசித்த பின்னைய உரிமையாளர் இந்தியாவில் இருந்து சிற்பாசாரியர்களை வரவழைத்து திரு கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் 1938-1940 காலப்பகுதியில் கட்டி முடித்தனர். இக்கட்டிடம் முழுமையும் கருங்கல்லினால் ஆனது. இவ்வாலயம் கட்டப்பட்டதன் நோக்கம் கல்வியைத் தொடர தூயசிந்தனையுடன் இறைவனை வழிபட்டு கல்வியைத் தொடரவும் சமயாசாரப்படி ஒழுகி, நற்பிரசைக ளாக வாழவும் உதவுவதற்காகவே.
நித்திய பூசை,அபிஷேகம் குருபூசைகள், சமய விழாக்கள் என்பன விஷேடமாக நடைபெறுகின்றன. பாடசாலை சமூகம் அவ்வாலயத்தை புனிதமாக பராமரித்து வருகின்றமை முக்கியமான அம்சமாகும்.

Sharing is caring!

Add your review

12345