இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

இணுவிலிலே சிதம்பர நாதன் என்பவரின் புதல்வராக தோன்றியவர் கதிர்காமசேகரமானா முதலியார் என இயற்பெயர் கொண்டவர். இவர் இளமையிலே கவிபாடும் இயல்பினைப் பெற்றிருந்தார்.

சிவகாமியம்மையார் மீதும் கவிபாடினார். இதனால் இவரினை சின்னத்தம்பிப் புலவர் என அழைத்தனர்.

இவர் ஒல்லாந்தர் காலத்திலே தோம்பு எழுதும் பணியில் ஈடுபட்டார். யாரோ கொடுத்த தவறான தகவலின் படி ஒல்லாந்தரினால் சிறைபிடிக்கப்பட்டார். இவர் சிறையிலிருந்து மீண்டெழ கருணாகரப் பிள்ளையாரையும், சிவகாமியம்மையாரையும் துதித்துப் பாடினார். ஏழாவது பாடல் பாடியதும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு உடைக்கப்பட்டது அதிகாரி புலவரினை வணங்கி சிறையிலிருந்து விடுவித்தான். எட்டாவது பாடல் பாடியதும் புலவருக்கு சதிசெய்தவன் சிறையிலடைக்கப்பட்டான். புலவர் மிகுதி இரு பாடல்களையும் பாடி சிறை நீக்கிய பதிகத்தினை நிறைவு செய்தார். இதனால் அன்னை சிவகாமியின் புகழும் புலவரின் புகழும் தரணியெங்கும் பரவியது.

சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலில் சிறை நீக்கிய படலம், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் எனும் பகுதிகளை இனிமையாகப் பாடினார். பஞ்சவர்ண தூது, நொண்டி நாடகம், கோவலன் நாடகம் எனும் நூல்களை எழுதினார். அவர் தனக்கு இயற்கையாக நேரும் துன்பங்களுக்கெல்லாம் சிவகாமியம்மையைப் பாடி விடிவு கண்டுள்ளார். சின்னத்தப்பிப் புலவரின் புலமையாலேயே இணுவில் திருவூர் பெருமையடைவதும் அன்னை சிவகாமியின் அருள்வளமே.

நன்றி: தகவல் – மூ.சிவலிங்கம்
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345