இணுவில் பல்லப்பை வைரவர் கோயில்

இவ்வாலயமானது இணுவிலின் வடதிசையிலே மருதனார் மடம் என்னும் குறிச்சியில் அமைவு பெற்றுள்ளது. இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே இணுவிலைச் சேர்ந்த சுப்பர் காசிநாதர் என்ற வேளாண்மைக் குலத்திலே பிறந்தவரினால் பல்லியாப்புலம் என்ற காணியில் வைரவர் சூலம் ஒன்றை வைத்து ஒரு சிறு கோயில் ஒன்றை அமைப்பித்தார். உடுவில் மகளிர் கவ்லூரியிலேயே ஆரப்பக்கோயில் அமைக்கப்பட்டதாகவும் பின்னர்தான் மருதனார் மடத்தில் அமைவு பெற்றதாகவும் குறிப்பிடுவர்.  இக்கோவிலை பராமரிக்கும் பணியை அப்பாத்துரை அவர்களிற்கு வழங்கினார்கள். அவர் சந்தைக்கு வரும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விளைபொருட்களை ஆலயத்தின் பெயராலே கொள்வனவு செய்து பெறப்பட்ட பணத்தையே திருப்பணிக்கு பயன்படுத்தினார். அவ்;வீதியால் செல்வோரும், அவ்வூர் மக்களும் ஆலயத்திருப்பணிக்கு உதவினர்.

இவ்வாலயத்தில் ஆரம்ப காலத்தில் மிருக பலி இடம்பெற்றதாகவும்  பின்னர் இடைநிறுத்தப்பட்டு ஆகமமுறைப்படி வழிபாடு இடம்பெறுவதாகவும் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்த மண்டபம் என மாற்றம் பெற்றிருப்பதையும் காணலாம். இவ்வாலய முன்றலில் நின்று அருளாளர்களான யோகர்சுவாமிகள், வடிவேற்சுவாமிகள், குடைச்சாமியார் போன்றவர்கள் அருள் வழங்கியதையும் குறிப்பிடலாம்.

1980 ஆம் ஆண்டிலேயே முதற் கும்பாபிஷேகம் இடம்பெற்று பின்னர் 2003ம் ஆண்டு பங்குனி மாத நன்னாளிளேயே கும்பாபாபிஷேகம் இடம்பெற்றதாகவும், விஷேச தினங்களில் எழுந்தருளி வைரவர் வீதியுலா இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இரு நேரப் பூசைகள் இடம்பெறுவதாகவும், அபிடேகங்களும், விஷேச பூசைகளும் இடம்பெறுவதாகவும் கூறுவர். இவ்வாலயம் சிறப்படைவது இணுவில் கிராமத்திற்கே பெருமையைத்தேடித் தருகின்றது என்றால் மிகையாகாது.

நன்றி :
சீர் இணுவைத் திருவூர்

Sharing is caring!

Add your review

12345