இணுவில் ஸ்ரீ நரசிங்கவைரவர்

அந்தணப்பெரியாரிடமிருந்து காசிநாதர் இராமுப்பிள்ளை என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் காசு கொடுத்து வாங்கினார். அந்நாள் பெருமானுடைய திருவருளால் நன்றியுள்ள நாய் ஒன்று வலம்வந்தது. அவ் அன்பர் அதன்மீது அன்பு செலுத்தினார். பெருமான் கனவிலே தோன்றி நான் புளியமரத்தில் இருக்க ஆசைப்படுகிறேன். எனக்கு 10 பானைவைத்து பொங்கல் செய்வாயானால் உனக்கு சகல சௌபாக்கியமும் உண்டாகும் எனக்கூறினார். அவ்மனிதருடைய தோற்றம் கட்டையாகவும், கறுப்பு வெள்ளை முடியோடு தாடி உள்ளவராகத் தோன்றியமையால் இது நரசிங்க வைரவர் எனத்திருநாமம் சூட்டப்பட்டது. உருவாக்கப்பட்ட ஆலயக்காணி கைமாறுதலடைந்து சங்கரி கந்தையா மகன் செல்லையா அக்காணியில் ஒருபரப்பை ஆலயத்திற்கு அர்ப்பணித்தார்.

நரசிங்க வைரவர் எழுந்தருளிச்சிலை 1991ஆம் ஆண்டு திரு.து.சிவராசா, க.பாலசுப்பிரமணியம், ஊரவர்களினால் வழங்கப்பட்டது. பூமிலக்ஷ்மி, மகாலக்ஷ்மி சமேத விஷ்ணுவிக்கிரகம் 1992 ஆம் ஆண்டு விவேகானந்தன் து.சிவகுமார் என்பவரால் நிறுவப்பட்டது. விநாயகர் எழுந்தருளி 1993ஆம் ஆண்டு க.தங்கராசாவாலும், மனோன்மணி அம்மன் விக்கிரகம் திருமதி சரஸ்வதி துரைராசாவாலும் நிறுவப்பட்டது. தொடர்ந்து விநாயகர் விக்கிரகம், சந்தானகோபாலர், முரகனது வேல் த.இராசரத்தினம், சி.பஞ்சாட்சரம், மூ.இராசா ஆகியோரால் வழங்கப்பட்டன.

திரு.அன்னலிங்கம், கமலாதேவி, திரு.சிவபாலசிங்கம், தி.குமாரசாமி என்போர் காணியை அன்பளிப்பாகவும், திருமதி செல்வம் இரத்தின சபாவதி, ப.கோப்பெரும்தேவன் ஆகியோர் பணம் அறவிட்டபின்பு காணியை வழங்கினர்.

பூஜைகளாக வருடந்தோறும் அலங்கார உற்சவம் நடாத்தப்படுவதோடு, நவராத்திரி, கும்பாபிஷேகதினம்,  நித்திய நைமித்திய பூசைகளும் இடம்பெறுகின்றன. மகோற்சவ காலங்களில் சாந்திஹோமம் இடம்பெற்று வருகின்றன. வீரமணி ஐயரினால் ஆக்கப்பட்ட திருவூஞ்சல்பாட்டும் பாடப் பெற்று வருகின்றன.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345