இராமநாதேஸ்வரன் ஆலயம்

யாழ்ப்பாணத்திலே குறிப்பிடக்கூடிய சில சமாதி ஆலயங்கள் உள்ளன. ஆவற்றில் ஒன்றுதான் இந்த மருதனார்மடம் இராமநாதேஸ்வரன் ஆலயம். பிரபலமாக வாழ்ந்தவர்கள், புனிதர்களை இவ்வாறு சமாதியில் அடக்கம் செய்த பின்னர் அதன் மேல் ஆலயம் அமைக்கும் மரபு காணப்படுகிறது.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்திலே  இணுவில் கிராமத்திலே 25 ஏக்கர் காணியை வாங்கி பெண்களுக்கென இராமநாதன் கல்லூரியை 1913 இல் இராமநாதன் நிறுவினார். தமிழர்களின் பண்பாட்டினைப் பிரகாசிக்கும் வகையிலே மாணவரது செயற்பாடு அமையவேண்டுமென சித்தம் கொண்டார். தன்னுடைய சமாதியை அச்சூழுலிலே அமைக்கவேண்டும் என்ற நோக்கிலே அதேயிடத்தில் ஒரு ஆலயம் அமைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய மருமகன் சு.நடேசம்பிள்ளை இவருடைய கனவினை நனவாக்கி வைத்தார். 1938-1940 காலப்பகுதியில் இவரது சமாதியடைந்த இடத்தில் இராமநாதேஸ்வரன் கோயில் இந்திய சிற்பக்கலை மரபினை ஒட்டி இந்தியக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு கருங்கற்களால் கட்டப்பட்டு புனிதமாக பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்தாகும்.

Sharing is caring!

Add your review

12345