உரும்பிராய் ஸ்ரீ காமாட்சி அம்பாள்

உரும்பிராய் ஸ்ரீ காமாட்சி அம்பாள்ஆலய வரலாறு 

சீரும் திருவும் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் உரும்பிராய் எனும் இக் கிராமத்தில் பெரிய பெரிய மரங்களை கொண்ட வேம்பன் சீமா என்ற காணியில் இருந்து ஒரு புளிய மரத்தை தறித்த போது திரு .அருணரின் மனைவி திருமதி சின்னன் அருணர் அவர்களின் உடம்பில் அம்பாள் ஆட்கொண்டு தான் இன்னார் என்றும் தனக்கு விளக்கு வைக்கும்படி கேட்டுக்கொண்டார் . அதன் படி ஒரு பூவரச மரத்தடியில் விளக்கு வைக்கப்பட்டு வந்தது . சிறிது காலத்தில் அதன் மிக அருகே தோன்றிய வேப்பம் மரத்தை தல விருச்சமாக கொண்டு வழிபாடு நடாத்தி வந்தனர் . உரும்பிராய் ஸ்ரீ காமாட்சி அம்பாள் பின்பு 1925ம் ஆண்டளவில் கோவிலாக கட்டப்பட்டு 1928ம் ஆண்டளவில் உரும்பிராய் ஸ்ரீ கு . பொன்னையா குருக்களால் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது.

 

புனருத்தான வரலாறு 

1942-அம்பாள் சிலை உருவாக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது .

1956-ஆலயத்திற்கு மடப்பள்ளி உருவாக்கப்பட்டது

1962– வெளி மண்டபம் உருவாக்கப்பட்டது

1967-மணிக்கோபுரம் கட்டப்பட்டது

1978/1979 ஐம்பது வருடத்திற்கு பின் கோவில் புனருத்தானம் செய்யப்பட்ட ஆலய மூலஸ்தூபி கட்டப்பட்டு சிவ ஸ்ரீ முத்துசுவாமி குருக்கள் தலைமையில் மஹா கும்பாபிசேகமும் அதனை தொடர்ந்து முறையே மண்டலாபிசேகமும் நடைபெற்றது

1987-இந்திய இராணுவத்தின் செல் தாக்குதலுக்கு இவ் ஆலயம் உள்ளாக்கப்பட்டது

1993-ஆண்டளவில் சிவ ஸ்ரீ கங்காதரக் குருக்களால் மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது

2007-இல் அழகுற அமைந்த ஆலயத்திற்கு மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது

2007-பத்து நாள் மகோற்சவம் நடைபெறத் தொடங்கியது

 

இவ்வாறான புனருத்தான பணிகளாலும் பலாலி வீதியில் வேப்பம் சீமா பகுதியில் சொக்கநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் மிக அழகாக காட்சியளிக்கிறது வேப்பம் சீமா காமாட்சி அம்பாள் ஆலயம் . இவ் ஆலயம் உரும்பிராய்க்கு மட்டும் அல்ல உலக வாழ் உரும்பிராய் உறவுகளுக்கும் தெரிந்திருக்கும் காரணம் உரும்பிராயில் ஒரே ஒரு திருமண மண்டபம் காணப்படும் கோவிலாக இக் கோவில் காணப்படுகிறது . கோவிலில் உள்ள கண்ணை கவரும் சிறந்த சித்திர வேலைப்பாடுகள் மற்றும் குதிரை சிங்க வாகனங்கள் இவ் ஆலயத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன 2012ம் ஆண்டளவில் அம்பாளுக்கு ஒரு சிறந்த அழகான சித்திர தேர் வெள்ளோட்டம் விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது . மேலும் இக் கோவிலில் பத்து நாள் மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழாவை உரும்பிராய் ஊர் இளைஞர்களினால் முன்னின்று நடாத்தப்படுவதும் கூறத்தக்கது.

ஆடியில்கொடியேறும் காமாட்சிஅம்பாள் வேண்டுவோர்க்கு எல்லாம் வேதனைகளை அழித்தெறிந்துடுவாள்!

 

நன்றி- ஆக்கம்-கங்கா ஸ்ரீ

மூலம்-http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345