ஊர்காவற்றுறை

ஊர்காவற்றுறை லைடன் தீவின் வடகரையிலுள்ளது. ஊர்காவற்றுறைத் துறைமுகத்திற்கு அண்மையில் ஒரு கடற்கோட்டை உள்ளது. இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. முற்காலத்தில் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்ட இத்துறைமுகம் வழியாக இந்தியாவிலிருந்து பெரிய படகுகள் மூலம் கள்ளிக்கோட்டை ஓடுகள், வடக்கன் மாடுகள், பிற பொருட்கள் எனப் பல பொருட்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்டன. ஊர்காவற்றுறையிலிருந்த முற்கால மக்கள் சிறந்த கப்பலோட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் இந்தியா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கெல்லாம் பாய்க் கப்பல்களில் சென்று வணிகம் செய்திருக்கின்றார்கள் என அறியப்படுகிறது. நெடுந்தீவு மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்யத் தொடங்குமுன், ஊர்காவற்றுறைக்குப் படகுகள் மூலம் சென்று அங்கிருந்தே தமது யாழ்ப்பாணப் பிரயாணத்தை தொடர்ந்தார்கள். அந்தக் காலங்களில் ஊர்காவற்றுறையே முக்கிய துறையாகவும், மக்கள் தங்கிச் செல்வதற்கும், தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கடைகள் நிறைந்த பட்டினமாகவும் விளங்கியது. இங்கு தீவுப் பகுதிகளுக்கான நீதிவிசாரணை மன்றம், பெரிய வைத்தியசாலை, பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயங்களும் இருந்தன.

Sharing is caring!

Add your review

12345