எழுத்தாளர் தீபச்செல்வன்

எழுத்தாளர் தீபச்செல்வன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கங் மற்றும் பயிற்சி மையத்தின் வருகை விரிவுரையாளராக பணிபுரிந்த பாலேந்திரன் பிரதீபன் – எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களிற்கு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் 2010ஆம் ஆண்டிற்கான ஊடகத்துறையின் விருதுகள் கிடைத்தள்ளன

சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் விருதும் நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். “சாந்தபுரம் நிலத்திற்காய் அழும் சனங்களின் குரல்கள்”எனும் கட்டுரைக்காகவே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

“நெருக்கடி சூழலில் செய்தி தேடலுக்கான விருது என்பது வடக்கு மற்றும் கிழக்கில் முக்கியமாக வடக்கில் செய்திகளைச் சேகரித்தப் பதிவு செய்வதில் நெருக்கடியான சூழ்நிலை காணப்படுகின்றது. இச்சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த இவ்விருதினை எனக்கான விருதாகக் கருதாமல் நெருக்கடியான சூழ்நிலையில்ப் பணியாற்றுகின்ற அனைத்து ஊடகவியலாளர்களிற்குமான விருதாகவும் வழங்கப்பட்ட கௌரவமாகவும் கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகின்றேன். இது நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு சிறந்த ஊக்குவிப்பாக அமையும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் கலைப்பீடாதிபதியும் தினக்குரலின் பிரதம ஆசிரியருமான பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நினைவாக இவ்விருது வழங்கப்பட்டமை மகிழ்சியான விடயமாக உள்ளது.

தமிழ்ப்பிரிவிற்கான சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் விருது கிடைத்துள்ளமையும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்களுடைய வாழ்க்கை வாழும் சூழல் போன்றவற்றைச் சித்தரிப்பதாக இவை அமைந்துள்ளன. இதன் விளைவாக மக்களிற்கு பல நன்மைகளும் கிடைத்துள்ளன. புகைப்படத்துறையில் எனக்கிருந்த ஆர்வமும் இவ்விருதுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு விருதுகள் பெற்றமை மகிழ்வாக உள்ளது” என்றார்.

கவிதை, களச்செய்தி, அறிக்கை, ஆவணப்படம், வீடியோ, விவரணம், புகைப்படங்கள், வானொலிப் பெட்டகம், ஊடகவியல் விமர்சனங்கள், கதைகள் என பல துறைகளில் செயற்பட்டு வரும் தீபச்செல்வன் ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி இரத்தினபுரத்தினை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் “தீபம்” எனும் வலைப்பதிவினை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் தீபச்செல்வன்
எழுத்தாளர் தீபச்செல்வன்

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345