ஐயாத்துரை தம்பு – நாடகக்கலைஞர்

ஐயாத்துரை தம்பு

02 தை 1937 இல் கௌரி இல்லம், தேவரையாளி, நெல்லியடி வடக்கு, கரவெட்டி என்னும் ஊரில் பிறந்தார். நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் 1950 இல் இருந்து தனது கலைப்பணியை ஆரம்பித்தார். கலாபூசணம் வி. வி. வைரமுத்து, அல்வாயூர் ச.தம்பிஐயா, அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா, கலாபூசணம் வி. கே. இரத்தினம், மு. பொன்னையா ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றார்.

ஐயாத்துரை தம்பு இசைக்கு ஆற்றிய சேவைகளாக கோவலன், அரிச்சந்திரா,சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், பவளக்கொடி, ஞானசௌந்தரி, ஶ்ரீவள்ளி, ஏழு பிள்ளை நல்லதங்காள், சாரங்கதாரா, பதவி மோகம், தூய உள்ளம், கன்னிக்கோட்டை, சகோதர விரோதி, முதல் இரவு, வாழ்க்கைப்போர், பண்டார வன்னியன், சூழ்ச்சியின் வீழ்ச்சி, அனார்கலி, தர்மதேவன், இழந்த காதல் போன்ற நாடகங்களில் பிரபல முன்னனி நடிகர்களுடன் பல்வேறு வேடங்கள் ஏற்று நடித்துள்ளார்.

ஐயாத்துரை தம்பு அவர்களின் கலைச்சேவையை பாராட்டி கலாவிநோதன் அண்ணாச்சாமி அவர்களால் “கலை ஒளி” என்ற பட்டம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

நன்றி : – தகவல் மூலம் – யாழ் மாவட்ட கலாசாரப்பேரவை

Sharing is caring!

Add your review

12345