ஓவியர் ரமணி

யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் ரமணி ஓவியம் மற்றும் சிற்பத் துறையில் ஏராளமான படைப்புக்களை உருவாக்கியுள்ளதோடு மட்டுமல்லாது தனக்கேயுரிய பாணியில் தடம் பதித்துத் தனியிடம் பெற்றவராவார்.

ஓவியத்துறையை எடுத்துக் கொண்டால், அநேகமான படைப்புக்கள் புத்தகங்களின் அட்டைப்பட ஓவியங்களாக உள்ளன. நீர் வர்ணம் முதற்கொண்டு பல்லூடக ஆக்கங்கள் வரை, பல்வேறுபட்ட ஊடகங்களிலும் மரபுகளிலும் ஓவியங்களைப் படைத்துள்ளார். ஈழத்தில் நவீன ஓவிய மரபில் படைப்புக்களை உருவாக்குவபர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்.

பெயர் பெற்ற சிற்பங்கள் பலவற்றைப் படைத்துள்ள ரமணி அவர்கள் அவற்றின் உருவ நேர்த்திக்காகவும் கூட்டொழுங்கமைவிற்காகவும் பெயர் பெற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது வருகை விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர் ஓய்வு பெற்ற ஓவிய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆவார்.

நன்றி – அளவெட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345