ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்

 ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்வாணி எனும் புனை பெயரில் வரைந்து வரும்  ஓவியர் வன்னியசிங்கம் செல்வன் வவுனியா மாவட்டத்தில் பிறந்து இளமைக் காலங்களை இடைக்காடு எனும் அழகான கிராமத்தில் வாழ்ந்தார்.பாடசாலைக் காலங்களில் அவரிடமுள்ள கலைத்திறனை அறிந்து அதற்கான வழியின் முதல் படிகளை தாண்ட உதவியவர் திரு வேலுப்பிள்ளை மாஸ்டர்.அதன் பின் கலை உலகத்தின் கதவையே திறந்து அவரை தனது சீடனாக ஏற்று சகல கலை நுணுக்களையும் கற்றுத் தந்தவர் தான் திரு மணியம் அவர்கள். மணியம் ஆட்ஸ் “Maniam Arts” யாழ் நல்லூரில் உள்ள விளம்பர கம்பனி. இதன் ஸ்தாபகரும் சிறந்த ஓவியரும் தான் திரு N.S. மணியம் அவர்கள். இங்கு தயார் செய்யப்படுபவை சினிமா தியேட்டருகளுக்கான பாரிய பானர்கள், கடைகளுக்கான விளம்பரப்பலகைகள், கோயில்களுக்கான திரைச்சீலைகள், கோபுர தேர் வர்ணம்தீட்டும் பணிகள், உருவப்படங்கள் வரைதல் இப்படியே எண்ணிக்கொண்டே போகலாம். இவை யாவும் கையால் வரையப்படுபவைதான். இதே வேளை யாழ் நகரில் உள்ள ” Building tecnological institute” இல் கட்டிடக்கலையையும் கற்றார். இலங்கையை விட்டு வெளியேறிய பின் இத்தாலியில் வசித்து வருகிறார். ஐரோப்பிய முறை ஓவியக்கலை நுட்பங்களை அறிவதற்காக “Accademia di belle arti” என்ற கல்லூரியில் பயின்றார். இங்கு பல்வேறு ஓவியக்கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். கலைவாணியை நினைத்து வாணி எனும் புனை பெயரில் தொடர்ந்தும் வரைந்து வருகிறார்.

 ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்  ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்  ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்

By – Shutharsan.S

Sharing is caring!

1 review on “ஓவியர் வன்னியசிங்கம் செல்வன்”

  1. பரணி says:

    இந்த ஓவியர் சிறந்த வண்ணங்களை தீட்டியுள்ளார். இவர் போன்றவர்களின் தகவல்களை தொகுத்து வெளியிடும் தங்களின் சேவை வளர்க.

Add your review

12345