கப்டன் மோகனதாஸ்

கப்டன் மோகனதாஸ்

கப்டன் மோகனதாஸ் நவீன கடலியலின் ஆரம்பப்புள்ளி ஆவார். வான சாஸ்திரம், கடல் சாஸ்திரம், மாலுமி சாஸ்திரம் ஆகியவற்றை தம் கையகத்தே கொண்டு ஆண்டாண்டு காலமாக வல்வெட்டித்துறையில் இருந்து வல்வையில் செய்யப்பெற்ற பல கப்பல்களை தூர தேசங்களிற்கு கொண்டு சென்றிருந்தவர்கள் வல்வையர்கள்.

அனுபவ ரீதியாக பெற்ற அறிவினை பெற்று இவ்வாறு கப்பல்களை கொண்டு சென்றிருந்தவர்களின் தலைவர் “தண்டையல்” என அழைக்கப் பெற்றிருந்தார்.

காலச்சக்கரம் தண்டையல்களை கப்படன்கள் (Master Mariners) என மாற்றியது. இந்த வகையில் வல்வையில் முதலாவதாக உருவான கப்டன் நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த திரு. காத்தாமுத்து மோகனதாஸ் ஆவார்.

அறுபதுகளின் பிற்பகுதியில் வர்த்தகக் கப்பலில் பயிற்சியினை ஆரம்பித்து படிப்படியாக பல வர்த்தகக் கப்பல்பளில் பயணித்து மூன்றாவது நிலை அதிகாரியாக (Third Officer), இரண்டாவது நிலை அதிகாரி (Second Officer), முதல் நிலை அதிகாரி (Chief Officer) ஆகிய தரங்களைத் தாண்டி எண்பதுகளின் ஆரம்பத்தில் கப்டன் ஆகியிருந்தார் திரு. மோகனதாஸ் அவர்கள்.

வல்வையில் இன்று பலர் இவரது நிலையை அடைந்த போதும் இன்றும் Captain என பெரிதாகப் பேசப்படும் ஓரிருவரில் முதன்மையானவர் திரு. மோகனதாஸ் அவர்கள்.

நன்றி – தகவல் மூலம்- valvettithurai.org இணையம்

Sharing is caring!

Add your review

12345