கலாநிதி சதாசிவம் கனகசபை

கலாநிதி சதாசிவம் கனகசபை D. Sc, D.Eng, M. Sc, B. Sc Eng, SLM& EEE, M&E&T. மாதகல் பதவி வழி உடையார் பரம்பரையில் தோன்றிய இரட்டைக் கலாநிதி சதாசிவம் கனகசபை அவர்கள் தாயாரின் ஊராகிய தொல்புரத்தில் பிறந்து 25 வயது வரை அங்கேயே வளர்ந்தவர். தனது ஆரம்ப மற்றும் முதல் நிலைக் கல்வியை தொல்புரம் விக்கினேஸ்வர வித்தியாலத்திலும் 2ம் நிலைக் கல்வியை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றவர். 3ம் நிலைக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகம் (கொழும்பில்) கற்று 1958ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியானார்.

கலாநிதி சதாசிவம் கனகசபை

பின்பு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் அதன்பின் மாத்தளை சென்தோமஸ் கல்லூரியிலும் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றினார்.

1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்து சென்று அங்கு `இன்னர் லண்டன் எடியுக்கேசன் ஓதேறிற்றி´யில் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு, பகுதி நேர மாணவனாகப் பொறியியல் கற்று  B.Sc Eng  பகுதி 1, பகுதி 2 சித்திபெற்றனர் பின்பு பகுதி 3 கற்பதற்கு அவருடைய போராசிரியர் W.F.Lovering (லொவறிங்) அவர்களின் புரிந்துரையில் லண்டன் கவுன்சில் புலமைப்பரிசில் பெற்றுப் பூர்த்தி செய்தார்.

1964ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் B.Sc Eng  பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து உலகப் பிரசித்திபெற்ற பொறியியல் நிறுவனங்களில் இங்கிலாந்திலும், டாவிலும் பணிபுரிந்தார். இதற்கு மேலாக தனது தொழில் நிபுணத்துவத்தால் பல்கலைக்கழகங்களாலும் மற்றும் பொறியியல் நிறுவனங்களாலும் நடாத்தப்பட்ட மகா நாடுகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றவர்.

1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவிலுள்ள பேமிங்காம் பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவனாக பட்டப் படிப்பில் ஈடுபட்டார். இதன் பயனாக 1977ஆம் ஆண்டு யூலை மாதம் “றேடியோ மற்றும் றேடார் தொழில்நுட்பத்தில்”  முதுமானிப்பட்டம் (M.Sc Radar Technology) பெற்று மனநிறைவு பெற்றார். 2000ஆம் ஆண்டு ஐனவரி மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் பொறியியலாளர் நிறுவனத்தினால் (IEEE) மூத்த வாழ்நாள் அங்கத்தவர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது.

இதன்பின் 2003ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரப் பல்கலைக்கழகத்திலும், தென்மேற்குப் பசுபிக் பல்கலைக்கழத்தாலும் முறையே கௌரவ விஞ்ஞானக் கலாநிதி ( Honourary D.Sc) பட்டமும், கௌரவப் பொறியியல் கலாநிதி ( Honourary D. Eng.) பட்டமும், அளித்துக் கௌரவிக்கப்பட்டவர்.

Sharing is caring!

Add your review

12345