கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்

கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்

இலங்கையில் அந்நியருடைய ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அநேக பாடசாலைகள் கிறீஸ்தவ மத ஆங்கிலப் பாடசாலைகளாக மிளிர்ந்தன. அப்போது சைவத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கினில் கைதடியில் 1910 ம் ஆண்டு பிரம்ம ஸ்ரீ இ. குருசாமிக் குருக்கள் என்பவரால் தமிழ் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை உருவாக்கத்திற்கு உரிய காணியை கிராம விதானையார் சங்கரப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் அன்பளிப்புச் செய்தார். 1927 ம் ஆண்டு பாடசாலையை கைதடி சைவ ஐக்கிய சங்கம் பொறுப்பேற்றது. 1944 ம் ஆண்டு சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திர வகுப்புக்கள் வரை (SSC) உள்ள பாடசாலையாக வளர்ச்சியடைந்தது. 1961 ம் ஆண்டு அரச பாடசாலையாகப் பொறுப்பேற்கப்பட்டது. 1970 ம் ஆண்டு சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. வ. ந. நவரத்தினம் அவர்களால் அலுவலகத்துடன் கூடிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 1983 ம் ஆண்டு கண்டி வீதியில் அமைந்த CMS ஆங்கிலப் பாடசாலை இப் பாடசாலையுடன் இணைக்கப்பட்டு கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டது.

கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் தனது போற்றத்தகு வளர்ச்சியாலும் கல்வித்தர விருத்தியாலும் பண்பியல் மேம்பாட்டாலும் மிகத் தரம் வாய்ந்த 1C பாடசாலையாக இன்று மிளிர்கின்றது.

பாடசாலைக் கீதம்

இராகம்.-சுத்தசாவேரி  தாளம்-ஆதி

வாழியவே கைதடி மகா வித்தியாலயம்

வாழ்க முத்துக்குமார சுவாமி மகா வித்தியாலயம் வாழியவே

செந்தமிழ் ஆங்கிலம் கணிதம்

புவியியல் விஞ்ஞானம் சமயம்

அழகியல், மனையியல் குடியியல்

வரலாறும் வர்த்தகமும்

தகவல் தொழில் நுட்பத்தோடு

விளையாட்டும் வினைத்திறனுடன்

தந்து எம்மை அறிஞர் ஆக்கும்

ஞாலம் போற்றும் எங்கள் அன்னை வாழியவே

நேர்மை அன்பு தியாகம் தூய்மையில்

தெய்வம் உண்டெனக் கொள்வோம்

ஆர்வமோடு உயர் கல்வி ஞானத்தால்

ஆத்மீக பலம் பெறுவோம்

அன்புடன் கல்வி பண்பு மூட்டி

அரவணைக்கும் ஆசிரியர்கள்

அதிபரோடு மாணவர்கள்

வாழ்க அன்னை புகழ் சிறக்க வாழியவே

பணிக்கூற்று

நவீன கற்பித்தல் நுட்பங்கள், சீர்திருத்தங்கள், சிந்தனைகளை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறு ஆசிரியர் தகைமைகளை விருத்தி செய்து பெறக்கூடிய அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து உச்சப்பயன் பெறும் வகையில் இடையிறாத அர்ப்பணத்துடன் செயற்படல்.

தூர நோக்கு

நவீன தகவல் யுகத்தில் எதிர்காலத்திற்காக தெரிவு செய்து கொள்ளும் யாதேனும் வழியில் வெற்றி நடை போடத் தேவையான ஒன்றிணைந்த ஆளுமைத் திறன்கள் ஊடாக உறுதியான அடித்தளத்தையுடைய மாணவர் சமூகத்தை உருவாக்கல்.

கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம்

Sharing is caring!

Add your review

12345