கோப்பாய் கண்ணகை அம்மன்

கோப்பாய் கண்ணகை அம்மன்கோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌தும் கோப்பாய் கண்ணகை அம்மன் என்றால் அது மிகையாகாது.
ஆல‌ய‌ வ‌ர‌லாறு
க‌ஜ‌பாகு ம‌ன்ன‌ன் த‌ன‌து ப‌டைக‌ளுட‌ன் சோழ‌நாடு திரும்பும் போது, அர‌ச‌னும், சேனைக‌ளும் த‌ங்கியிருந்த‌ ம‌ர‌ச்சோலைக‌ளிலே க‌ண்ண‌கி சிலையை தாபித்து, உரிய‌ பூச‌க‌ர்க‌ளையும் நிய‌மித்து, அவ‌ர்க‌ளுக்கு காணிக‌ளையும் வழ‌ங்கி த‌ன் நாடு திரும்பினான்.
அவ்வாறு அமைக்க‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌ங்க‌ள் ப‌ல‌ வ‌ட‌ப‌குதியில் உள்ள‌ன‌. அவ‌ற்றில் ஒன்றே எம‌து வ‌ட‌கோவை க‌ண்ண‌கை அம்ம‌ன் கோவில் ஆகும். ஆதிகால‌த்தில் ஆல‌ய‌த்தின் உள் வீதியிலுள்ள‌ கூழா ம‌ர‌த்தின் கீழ் க‌ண்ண‌கி விக்கிர‌க‌ம் வைத்து பூசைக‌ள் ந‌ட‌ந்திருக்க‌லாம். அத‌னால் தான் இன்றும் மூல‌ஸ்தான‌ பூசைக்கு முன்பு கூழா ம‌ர‌த்த‌டியில் விசேட‌ பூசைக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌.
அர‌ச‌னால் பூசாரிக்கு அன்ப‌ளிப்பு செய்ய‌ப்ப‌ட்ட‌ காணி “ப‌ண்டாரிப்பாத்தி” என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. அக்காணியிலேயே த‌ற்போதைய‌ பூசாரியின் வீடும் அமைந்துள்ள‌து.

ஆலய‌ அமைவிட‌ம்
குள‌மும் சோலைக‌ளும் சூழ்ந்த‌ “ப‌லானை” என்னும் இடத்தில் கோவில் அழ‌குற‌ அமைந்துள்ள‌து. ஆல‌ய‌த்தினுள் சுமார் 25 அடி சுற்ற‌ள‌வுள்ள‌ கூழா ம‌ர‌ம் ஒன்று உண்டு. இதுவே த‌ல‌ விருட்ச‌ம் ஆகும். இம்ம‌ர‌த்தில் நாக‌பாம்புக‌ள் வ‌சிப்ப‌தாக‌  பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌ கேள்விப்ப‌ட்டிருக்கிறோம். இதுவ‌ரை அவை யாரையும் தீண்டிய‌தில்லை.
பூசைக‌ள்
இவ்வால‌ய‌த்தில் ப‌ங்குனி மாத‌ம் வ‌ரும் திங்க‌ட்கிழ‌மைக‌ளில் ப‌க்த‌ர்க‌ள் பொங்க‌ல் செய்து வ‌ழிபாடு ந‌டைபெறுவ‌து குறிப்பிட‌த‌க்க‌தாகும். ம‌ற்றும் சிவ‌ராத்திரி, ந‌வ‌ராத்திரி, சோம‌வார‌ம், திருவெண்பாவை என்ப‌ன‌வும் விம‌ர்சையாக‌ கொண்டாட‌ப்ப‌டுகின்ற‌ன‌. த‌ற்போது காலை, மாலை என இரு வேளைக‌ள் ம‌ட்டுமே நித்திய‌ பூசைக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌.
வ‌ருடாந்த‌ உற்ச‌வ‌ம்
இவ்வால‌ய‌த்தில் 1973 ஆம் ஆண்டுவ‌ரை கொடியேற்ற‌த்துடன் கூடிய‌ மகோற்ச‌வ‌ம் ஏற்க்குறைய‌ 25 நாட்க‌ள் வ‌ரை ந‌டைபெற்ற‌து. அப்போது ப‌ல‌ க‌லை நிக‌ழ்வுக‌ளும் ந‌டைபெறும். பின்ன‌ர் ஆல‌ய‌ குருக்க‌ளுக்கும் பொதும‌க்க‌ளுக்கும் இடையில் ஏற்ப‌ட்ட‌ க‌ருத்து வேறுபாடுக‌ளால் ஆல‌ய‌ம் 1974-1983 வ‌ரை மூட‌ப்ப‌ட்டிருந்த‌து. பின்பு நீதிம‌ன்ற‌த்தின் தீர்ப்பிற்க‌மைய‌ ஆல‌ய‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டு, புன‌ருத்தார‌ண‌ம் செய்ய‌ப்பட்டு 1986 இல் ம‌காகும்பாபிக்ஷேக‌ம் ந‌டைபெற்ற‌து.
த‌ற்போது ஆடி மாத‌த்தில் 10 தின‌ங்க‌ள் அல‌ங்கார‌ உற்ச‌வ‌ங்க‌ள் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌. இவ‌ற்றில் ச‌ப்ப‌ரத்திருவிழா, ம‌ங்ச‌த்திருவிழா, தேர்த்திருவிழா என்ப‌ன‌ மிக‌ச்சிறப்பாக‌ ந‌டைபெறுகின்ற‌ன‌. சில‌ ஆண்டுக‌ளிற்கு முன் ஆலய‌த்திற்கென‌ மங்ச‌மும், அழ‌கிய‌ சித்திர‌தேரும் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ஆல‌ய‌ அமைப்பு
இவ் ஆல‌ய‌மும் ஏனைய‌ ஆல‌ய‌ங்க‌ளைப்போல‌வே ஆக‌ம‌ விதிமுறைப்ப‌டி அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. க‌ருவ‌றைக்கு மேலே அழ‌கிய‌ விமான‌ம் க‌ண்ண‌கி வ‌ர‌லாற்றுச்சிற்ப்ங்க‌ளோடு அமைந்துள்ள‌து. இதைவிட‌ க‌ண்ண‌கியின் வ‌ர‌லாற்றைக்கூறும் ஓவிய‌ங்க‌ள் ஆல‌ய‌ உள் வீதியில் அழ‌குற‌ வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ரிவார‌ மூர்த்திக‌ளாக‌ பிள்ளையார், முருக‌ன், வைரவ‌ர் என உள் வீதியில் த‌னித்த‌னி ஆல‌ய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

த‌ற்போது ஆலய‌ம் பாலாஸ்தான‌ம் செய்ய‌ப்ப‌ட்டு, புன‌ர‌மைப்பு வேலைக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. க‌ருவ‌றைக்கு முன்பாக‌ உள்ள‌ ம‌ண்ட‌ப‌ங்க‌ளின் கூரைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு புதிய‌ கூரைக‌ள் அமைக்கும் வேலைக‌ளும், ப‌ரிவார‌மூர்த்திக‌ளுக்கான புதிய‌ ஆல‌ய‌ங்க‌ள் அமைப்ப‌த‌ற்கான‌ வேலைக‌ளும் ந‌டைபெறுவ‌தாக‌ அறிய‌ப்ப‌டுகிற‌து.

புல‌ம்பெய‌ர்ந்த‌ கோப்பாய் அன்ப‌ர்க‌ள் ம‌ன‌து வைத்தால் எம‌து அம்ம‌ன் ஆல‌ய‌ம் மிகப்பொலிவுட‌ன் விள‌ங்கும். நிதியுத‌விக‌ளை உரிய‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு ஆல‌ய‌த்திற்கு வ‌ழங்கி ஆல‌ய‌ வ‌ள‌ர்ச்சிக்கு உத‌வி அம்ம‌னின் அருளை பெறுவோமாக‌…

By – Shutharsan.S

நன்றி- ஆக்க‌ம்: வ‌. சித்திர‌வேலாயுத‌ம்.

மூலம்-http://www.kopay.infoஇணையம்

Sharing is caring!

Add your review

12345