சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் உலகளாவிய மட்டத்தில் வாமும் சைவத்தமிழ்ப் பெண்கள் எல்லோரிலும் முதன்மையானவராகத் திகழ்கிறார்.

பண்டிதர், சைவப்புலவர் பட்டங்களைப் பெற்று ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்த இவர் தன்னுடைய பேச்சுத் திறத்தால் இலங்கை, இந்தியா, மலேசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் பெரும்புகழ் பெற்றுள்ளார். ஆங்காங்கு வாழும் தமிழ்மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பத்துஆண்டுகள் பொருளாளராக இருந்த இவர் 1977 தொடக்கம் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். இவரது காலத்தில் துர்க்கையம்மன் கோயில் பேரரெழுச்சியுண்டது. வலி வடக்கில் துர்க்காபுரம் எனும் அளவுக்கு வளர்ச்சி காண்கிறது.

ஆசிரியப்பணி, சமூகப்பணி. ஆலய அறங்காவல்பணி, சொற்பொழிவுப்பணி ஆகிய பன்முகப்பணிகளால், தான் தலைமை தாங்கும் கோயில் அறக் கோட்டமாக, இறைபணியுடன் மக்கள் பணியும் செய்கின்ற முன்மாதிரியான சேவையைச் செய்து வருகிறார்

இங்கு மகளிர் இல்லம், அன்னையர் இல்லம், சைத்தமிழ் ஆய்வு நூலகம் என்பவற்றினூடாக இவர் ஆதரவற்றோர்க்குச் செய்யும் தொண்டு கணக்கிட முடியாதது. இவரது சமய, சமூகப்பணிகளைக் கௌரவிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டம் (1997) வழங்கிக் கௌரவித்தது.

இவர் பலநூல்களின் ஆசிரியராகவும் பல பழம்பெரும் நூல்களின் பதிரிப்பாசிரியராகவும் திகழ்கிறார். சிங்கப்பூர் மலேசியச் சொற்பொழிவுகண்ட இலண்டனில் ஏழுவாரம், பத்துச் சொற்பொழிவுகண்ட கந்தபுராணச் சொற்பொழிவுகள் முதலானவை இவரது நூல்கள்

இவரைத் தலைவியாகக் கொண்ட நூல்கள் பல மணிவிழா மலர். சிவத்தமிழ் இன்பம் பவளவிழாமலர். தங்கம்மாநான் மணிவமாலை தங்கத்தலைவி முதலான பல நூல்களும் கவிதைகளும் எண்ணில்லாதன எனலாம்

இவரால் பதிப்பிக்கப் பெற்றவை பெரியபுராண வசனம். அரியவும் பெரியவும் பகுதி-1. பகுதி-2 சைவபோதம். அபிராமி அந்தாதி. கந்தபுராணச் சுருக்கம். சைவக் கிரியைகளும் விரதங்களும் முதலான பலவாகும்.

ஆண்டுதோறும்  “சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அறநிதியத்தின்” முலம் தனது பிறந்ததினமான ஐனவரி 7இல் செய்யும் அறப்பணிகள் மிக முன்மாதிரியானவை. நோயாளர் ஏழைகள். வலது குறைந்தோர். அகதிகள் முதலானவர்க்கு. நிறுவனரீதியான அறப்பணிக் கொடைகளை வழங்குதல் இவரது முக்கிய பணியாகும்

2000.01.07 இல் எழுபத்தைந்து வயது நிறைவு பெற்றுப் பவளவிழாக்கண்டு. தனது அறக்கொடை முலம் வயோதிபரான ஆதரவற்ற பெண்களுக்கு அன்னையர் இல்லம் அமைத்தும் சைவத்தமிழ்ப் பழம்பெரும் நூல்களைத் தேடி எடுத்துச் தமிழ் ஆய்வுநூலகம் அமைத்தும் உள்ளபணிகளுடன் உச்சமான இப்பணிகளையும் இணைத்துச் செய்யும் இணையிலா அன்னையென இவரைப் போற்றுதல் தகும்.

By – Shutharsan.S

Sharing is caring!

2 reviews on “சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி”

  1. mayurie says:

    nalla aakam………. melum munerha…….

Add your review

12345